புதுக்கோட்டை நர்சிங் மாணவி மரணம்.. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என எஸ்.பி விளக்கம்!
புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே உயிரிழந்த நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சியைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், வீட்டில் இருந்து மாயமான நிலையில் அதே ஊரில் உள்ள கிணற்றில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக சடலமாக மீட்கப்பட்டார். இதனை தற்கொலை வழக்காக வடகாடு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே அந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடலை பெற மறுத்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை, மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தினர். மாணவியின் இறப்பில் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம் கொடுத்ததால்தான் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேற்று வெளியிட்ட தகவலில், நர்சிங் மாணவியும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞரும் காதலித்துள்ளனர். பின்னர், சொந்த காரணங்களுக்காக பிரிந்துவிட்டனர். மன அழுத்தம் காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலில் காயங்கள் இல்லை என பிரேத பரிசோதனை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்படவில்லை என தெரிகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார் என சமூக வலைதளத்தில் பரவும் தகவல் தவறானது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications