புதுச்சேரியிலும் பீகார் மாடல்.. உடைகிறதா பாஜக கூட்டணி? சட்டசபை வரை “பஞ்சாயத்து” -அப்செட்டில் என்.ஆர்
புதுச்சேரி: ஆளும் கூட்டணியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்வதாக பேச்சு அடிபட்ட நிலையில், நேற்று சட்டமன்றத்திலேயே பாஜக எம்.எல்.ஏக்கள் அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனின் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே தமிழிசை பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ், திமுக கட்சியினர் நிதீஷ் குமார் நிலை ரங்கசாமிக்கு வரும் என்று தெரிவித்தனர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியோ, "புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள்." என்று குற்றம்சாட்டினார்.

சுயேட்சை எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் நேற்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன், "எனக்கு தெரியாமலேயே என்னுடைய தொகுதியில் கோயில் கமிட்டி, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கிறார்கள். நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்பதால் அரசு இப்படி செய்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

அரசு மீது புகார்
மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி சீனிவாஸும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அதன் பின்னர் சட்டசபையில் பேசிய பாஜக எம்.எம்.ஏ கல்யாணசுந்தரம், "அறநிலையத்துறை எம்.எல்.ஏக்களின் ஆலோசனையை கேட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதே விதிமுறை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் இதை பின்பற்றுகிறார்கள். ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் இதை கடைபிடிக்கவில்லை.

ஆட்சியில் இருக்க அவசியமில்லை
பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் என்பதற்காக பழிவாங்குகிறார்களா என்பதை இங்கேயே சொல்லிவிடுங்கள். நாங்கள் கையெழுத்து போட்டே முதல்வராக்கியுள்ளோம். எங்களுக்கு இந்த ஆட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக, பாஜக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி சபாநாயகர், உள்துறை அமைச்சர் தொகுதியிலும் இதேநிலைதான்.

கூட்டணியில் பிளவு
பிரதமர் நிதி ஒதுக்கவில்லை. நிதி ஆணையத்தில் சேர்க்கவில்லை என்று சொல்கிறார்கள். நாம் இங்கு கூட்டணி அரசை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன." என்றார். கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக எம்.எல்.ஏக்களே சட்டசபையில் அரசுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளது ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்படுத்தியுள்ளதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications