சிலிர்ப்பில் புதுக்கோட்டை.. ஞானசேகரன் வீட்டில் ஒரே ஆச்சரியம்.. திடீரென திரண்டு வந்த மக்கள்.. அதிசயம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: இணையத்தில் ஒரு போட்டோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த கன்றுக்குட்டியை புதுக்கோட்டை கிராம மக்கள் திரண்டு சென்று பார்த்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில்கூட, கடந்த வாரம் ஒரு அதிசய சம்பவம் நடந்தது.. கவிதா என்பவர் வீட்டிலிருக்கும் பசுமாடு, கன்றினை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்குட்டிக்கு 4 கால்களுடன் சேர்த்து உடலில் ஒரு கால்களும் இருந்துள்ளன. பிறக்கும்போதே உடலில் ஒரு காலுடன் பிறந்ததை பார்த்து கவிதா அதிர்ந்து போனார்.

Pudukkottai Innovative Incident and calf born with 6 legs near pudukkottai what happened actually

டாக்டர்: அதனால், டாக்டரை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறார்கள்.. இது மரபணு தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம், இதனால் கன்றுக்கு எந்த ஒரு உடல்நலக்குறைவும் ஏற்படாது, கன்றுக்குட்டி வளர்ந்ததுமே, ஆபரேஷன் செய்து கால்களை அகற்றி விடலாம் என்று டாக்டர் சொல்லியிருக்கிறாராம். இதற்கு பிறகுதான் கவிதாவுக்கு நிம்மதியானது.

பசுமாடு: அதுபோலவே, பழனியில் கடந்த மாதம் ஒரு பசுமாடுக்கு கன்று ஈன்றவே முடியவில்லை. எனவே, உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டு, வயிற்றில் இருந்து கன்றை பிரித்து எடுத்தனர். அப்போதுதான், கன்றுக்குட்டிக்கு 2 தலை, 7 கால்கள், 2 வால்கள் இருந்திருக்கின்றன.. இந்த உடல் பாகங்கள் எல்லாமே ஒட்டிய நிலையிலேயே காணப்படவும், அந்த பகுதி மக்களே திரண்டு வந்து இந்த கன்றினை அதிசயமாக பார்த்து சென்றார்கள்.

இப்படித்தான், வடக்கு அயர்லாந்தில் ஒரு மாட்டுப்பண்ணையில், பசுமாட்டிற்கு 6 கால்களுடன் ஒரு கன்றுக்குட்டி பிறந்தது. அந்த 6 கால்களை பார்த்ததுமே, பசுமாட்டின் உரிமையாளர் கவலை அடைந்தார்.. இதை ஒரு குறைபாடாகவே பார்த்தார். அந்த கன்று பண்ணையில் உள்ள மற்ற கால்நடைகளால் புறக்கணிக்கக்கூடுமே என்றும் கவலைப்பட்டார்.

ஆபரேஷன்: கன்றுக்குட்டி 6 கால்களுடன் இருந்ததால், அதற்காக ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தார். அதாவது 6 கால்களில் ஒன்று, அந்த கன்றின் முதுகெலும்புடன் இணைந்திருக்கிறதாம். இதனை பிரித்து எடுப்பது கடினம் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்களாம். இதனால், அந்த கன்றுக்குட்டி மீது அதிக பாசம் கொண்டு, அது தங்குவதற்காகவே பிரத்யேகமாக குடில் போல அமைத்து பாதுகாத்து வருகிறார்..

சோஷியல் மீடியாவிலும், "ஏஞ்சல் சிறகுகள்" என்ற பெயரிட்டு கன்றுக்குட்டிக்கு ஆதரவை பெற்றிருந்தார். இந்த சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறைபாடுகள்: ஆக, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இப்படியான குறைபாடுள்ள கன்றுகள் அதிகமாக பிறப்பதாக சொல்கிறார்கள்.. பெரும்பாலும் மரபணு குறைபாடுகளே இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படுகின்றன. இதோ புதுக்கோட்டையிலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது..

தென்னந்திரையான்பட்டி (முள்ளூர்) கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் பசு ஒன்றை வளர்த்து வந்த நிலையில், அது தற்போது கன்றினை ஈன்றுள்ளது. அந்த கன்றுக்கும் மொத்தம் 6 கால்கள் இருக்கின்றன.. இதைப்பார்த்து அதிர்ந்து போன ஞானசேகரன், உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் தந்தார்.. கால்நடை உதவி மருத்துவரும், நேரடியாக வந்து பசுவையும், கன்றினையும் பார்வையிட்டார். இதய துடிப்பு, மூச்சுக்காற்று, வெப்ப ஓட்டம் எல்லாமே சீராக இருக்கிறதாம்.

டாக்டர்கள்: இதுகுறித்து டாக்டர் சொன்னபோது, "இப்படி இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பதற்கு பாலிமெலியா எனப்படுகிறது. இவை மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்பட வாய்ப்புள்ளது.. எனினும், கன்றுகுட்டிக்கு குடற்புழு நீக்கம் மருந்து, கால்சியம் கலவை கொடுத்து நல்லமுறையில் வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை, கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக ஞானசேகரன் அறிவித்துள்ளாராம். இந்த அதிசய கன்றுக்குட்டியைதான், கிராம மக்கள் திரண்டு சென்று பார்த்து வருகிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+