புதுக்கோட்டை ஜோதிகா.. முதல்ல காதல்.. அப்பறம் கள்ளக்காதல்.. அந்த கிணற்றில் எட்டி பார்த்தால்?
புதுக்கோட்டை: தன் குழந்தையை அக்கா குழந்தை எனக்கூறி இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த இளம்பெண்ணின் குழந்தை குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடேஷ்.. 28 வயதாகிறது.. பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.. ஜோதிகா என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. ஜோதிகாவும், வெங்கடேஷை உயிருக்கு உயிராக விரும்பினார்..

ஆண் குழந்தை: இருவருமே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது 2 வயதில் சோட்டு(எ)இசை என்ற ஆண் குழந்தை உள்ளது.. வெங்கடேஷூக்கு பெங்களூருவில் வேலை என்பதால், இவர்கள் அனைவருமே பெங்களூருவில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஜோதிகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம், பரத் என்ற இளைஞர் அறிமுகமாகி உள்ளார்.. பரத்துக்கு 25 வயதாகிறது.. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்தவர்.. தற்போது, கடலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறாராம் பரத்..
கள்ளக்காதல்: இன்ஸ்டாகிராமில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பானது, நாளடைவில் காதலாக கனிந்தது.. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த காதல் மலர்ந்திருக்கிறது.. உடனே, இருவருமே செல்போன் நம்பரை பரிமாறி கொண்டு, வாட்ஸ்அப்பில் பேசி வந்தனர்..
நாளுக்கு நாள் பரத்திடம் ஜோதிகாவுக்கு நெருக்கம் அதிகமானதால், தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தையே பரத்திடம் மறைத்துவிட்டார்.. கல்யாணம் ஆனதையே சொல்லாதவர், 2 வயதில் குழந்தை இருப்பது குறித்து வாயே திறக்கவில்லை.
பூரித்த பரத்: அதுமட்டுமல்ல, "நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்து கொண்டு, சந்தோஷமாக வாழலாம்" என்று பரத்திடம் ஜோதிகா சொல்லி உள்ளார்.. இதைக்கேட்ட பரத்தும், பூரிப்படைந்து, கடந்த மாதம் பெங்களூருக்கு ஜோதிகாவை நேரில் சந்திக்க சென்றுள்ளார்..
அப்போது, அவருடன் இருந்த குழந்தை குறித்து பரத் கேட்டதற்கு, அது தன்னுடைய அக்கா குழந்தை என்றும், அக்கா இறந்து விட்டதால் தன்னுடன் குழந்தை இருப்பதாகவும், விரைவில் குழந்தையை அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவதாகவும் பரத்திடம் சொல்லி உள்ளார்.
தனிக்குடித்தனம்: இதையும் பரத் முழுமையாக நம்பியிருக்கிறார்.. பிறகு, குழந்தையுடன் ஜோதிகாவை இலுப்பூர் அழைத்து வந்து கல்யாணம் செய்து கொண்டார்.. அங்கேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, குடும்பமும் நடத்த துவங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் ஜோதிகாவுடன் இருந்த குழந்தை, கடந்த 13ம் தேதி திடீரென்று காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பரத்தின் தம்பி ஜெயராஜ் (18) விளையாடுவதற்காக தூக்கி சென்றுவிட்டதாக சொல்லி உள்ளார்.. ஆனால், வீட்டின் பக்கத்திலிருந்த குளத்தில், குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இலுப்பூர் போலீசார்: இதுகுறித்து இலுப்பூர் போலீசார் தகவலறிந்து வந்து, புதுக்கோட்டை மருத்துவமனைக்கு குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ஜோதிகாவிடம் இதை பற்றி கேட்டதற்கு, அந்த குழந்தை தனக்கு பிறந்தது என்று ஒப்புக் கொண்டார்.. இதைக்கேட்ட போலீசார், முதல் கணவர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து, இலுப்பூருக்கு வரவழைத்தனர்..
இப்போது, வெங்கடேஷ், பரத், ஜோதிகா, ஜெயராஜ் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால், குழந்தை எப்படி இறந்தது? யார் கொன்றது? குளத்தில் வீசியது யார்? இது எதுவுமே தெரியவில்லை.. குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான், இதுகுறித்த மற்ற விவரங்கள் தெரியவரும்.












Click it and Unblock the Notifications