புதுக்கோட்டையே முழிக்குது.. கந்தர்வக்கோட்டையில் ஒரு கள்ளக்காதல்.. கடைசியில் அந்த கணவனுக்கு செம குஷி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: வடமாநில பெண் ஒருவர், தன்னுடைய கள்ளக்காதலனை தேடி தமிழ்நாட்டுக்கு வந்த சம்பவம் பரபரப்பை தந்துவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கிராமத்தை சோ்ந்தவர் அந்த இளைஞர்.. 24 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்.

Pudukkottai Gandarvakottai

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மத்தியபிரதேச மாநிலத்துக்கு, கூலி வேலைக்காக சென்றிருந்தார்.. அப்போது அங்கிருந்த 23 வயதுடைய பெண்ணுடன் இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால், அந்த வடமாநில பெண்ணுக்கு கல்யாணமாகியிருந்தது. ஆனாலும், இளைஞருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்...

வடமாநில பெண்: வேலைக்கு போன இளைஞர், கொஞ்ச நாளிலேயே ஹிந்தியும் கற்று கொண்டுவிட்டதால், வடமாநில பெண்ணுடன் சகஜமாக பழக நேர்ந்துள்ளது.. பிறகு, மத்திய பிரதேசத்தில் கூலிவேலை முடிந்துவிட்டதால், அங்கிருந்த கடந்த வருடம் சொந்த ஊரான கந்தர்வகோட்டைக்கு அந்த இளைஞர் வந்துவிட்டார்.. ஆனாலும், இளம்பெண், இளைஞரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில், 4 நாளைக்கு முன்பு அந்த வடமாநில பெண், மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து கிளம்பி இளைஞரை தேடி, கந்தா்வகோட்டைக்கு வந்துவிட்டார்.. இளைஞரின் வீட்டிலேயே கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தார்.. இதனிடையே தன்னுடைய மனைவியை காணவில்லை என்று பெண்ணின் கணவர், மத்திய பிரதேச போலீசில் புகார் தந்துள்ளார்..

கந்தர்வக்கோட்டை: புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது, இளம்பெண் தமிழ்நாட்டுக்கு கிளம்பி சென்றதும், கந்தர்வகோட்டையில் இளைஞருடன் தங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணின் கணவர், மத்திய பிரதேச போலீசாரையும், அந்த பெண்ணின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்தார்..

அதேபோல, இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு, இளைஞரும் கந்தர்வக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சென்றார். இப்போது கந்தர்வகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் மொத்த பேரும் ஒன்றுசேர்ந்தனர்.

அந்த பெண் அவராகவே விருப்பப்பட்டு கந்தர்வக்கோட்டை வந்ததாகவும், தனக்கு எதுவும் தெரியாது, அந்த பெண்ணை தமிழ்நாட்டுக்கு தான் வரசொல்லவில்லை என்றும் இளைஞர் போலீசாரிடம் சொன்னார். அதுமட்டுமல்லால், கணவருடன் அந்த பெண்ணை அனுப்பி வைக்கவும் சம்மதம் என்று சொன்னார்.

ஒப்படைப்பு: இதற்கு பிறகு, அந்த பெண்ணும் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார்... அப்பெண்ணை போலீசார் மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்ததுடன், மத்தியபிரதேசத்திற்கு இந்த தம்பதியை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்து தந்தனர்.

கள்ளக்காதலனை தேடி வடமாநில பெண் கந்தர்வக்கோட்டைக்கு வந்ததும், மனைவி தனக்கு திரும்ப கிடைத்த மகிழ்ச்சியுடன் கணவர் மத்திய பிரதேசத்துக்கு அழைத்து சென்றதும் புதுக்கோட்டையில் பரபரப்பை தந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+