புதுக்கோட்டை கலெக்டர் பங்களாவில் விநாயகர் சிலை உடைந்ததா? பரவிய தகவல்.. மாவட்ட நிர்வாகம் விளக்கம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவில் இருந்த விநாயகர் சிலையை ஆட்சியர் மெர்சி ரம்யா அகற்ற உத்தரவிட்டதால், அதனை அகற்றும்போது சிலை உடைந்துவிட்டதாக இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பங்களாவின் நுழைவாயிலில் விநாயகர் சிலை ஒன்று நீண்ட காலமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கவிதா ராமு அண்மையில் மாற்றப்பட்டு தற்போது மெர்சி ரம்யா புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார். அவர் இதுவரை கலெக்டர் பங்களாவில் குடியேறவில்லை. பங்களாவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கலெக்டர் பங்களா வாயிலில் இருந்த பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், நேற்று பிள்ளையார் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும், அகற்றும்போது சிலை உடைந்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த தகவல் பரவிய நிலையில், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டனர்.
பிள்ளையார் சிலையை அகற்றியது ஆட்சியர் மெர்ஸி ரம்யாவின் ஆழமான மத உணர்வை காட்டுகிறது என்று கொந்தளித்த இந்து அமைப்பினர், இதற்கு எதிராக தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். ஆனால், விநாயகர் சிலை உடைந்துவிட்டதாக பரவும் தகவல் பொய்யானது என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது.
— District Collector, Pudukkottai (@pdkt_collector) June 3, 2023
அரசியலமைப்புசட்டத்தின்படி,… pic.twitter.com/MzSwnYcoIF
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவல் வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொண்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது.
அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம் கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications