ஆசியர்களுக்குகே கடுப்பாயிடுச்சு போல.. பயிற்சி வகுப்புக்கு மட்டம்.. சுவர் ஏறி குதித்து எஸ்கேப்!
புதுக்கோட்டை: தேர்தல் பயிற்சி வகுப்புக்கு இடையே வெளியேறும் ஆசிரியர்களை கட்டுப்படுத்த பள்ளி கேட்டுக்கு பூட்டு போடப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து வெளியேறியதால் பரபரப்பு ஏறபட்டது.
Recommended Video

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. பிரதான கட்சிகள் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. மறுபக்கம் தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொகுதி வாரியாக மும்முரமாக செய்து வருகிறது,
சட்டசபை தேர்தலையொட்டி 234 தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்றப்போகும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ராணியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது

கலெக்டர் ஆய்வு
இதில் கலந்து கொள்வோர் காலை முதல் மாலை வரை வகுப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர், , இவர்களுக்கான மதிய உணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். அதன்பின், உணவு இடைவேளையும் விடப்பட்டது .

ஆசிரியர்கள் வெளியேற்றம்
உடனடியாக உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்ட ஆசிரியர்கள், நேரடியாக பள்ளி நுழைவாயில் நோக்கி சென்றனர். ஆசிரியர்கள் வெளியேற முயல்வது தெரிந்ததும் உடனடியாக கேட்டுக்கு அதிகாரிகள் தரப்பில் பூட்டுப்போடப்பட்டதாக கூறப்பட்டுகிறது..

எஸ்கேப்
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள், வகுப்புக்கு செல்லாமல் பள்ளி பக்கவாட்டு மதில் சுவர் அருகே சென்று, சுவர் ஏறி குதித்தனர். ஆண் ஆசிரியர்களுக்கு இணையாக ஆசிரியைகளும் சுவர் ஏறி குதித்து சென்றனர். இதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் என்னய்யா நடக்குது இங்கு, ஆசிரியர்களுக்கே கடுப்பாயிடுச்சோ என்று முணுமுணுத்தபடி சென்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications