போலீஸை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை தூக்கிகொண்டு ஓடிய மர்ம நபர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற வாக்குப்பெட்டி போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என கிராமப்புறங்களை சார்ந்த பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை5 மணிக்கு நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்படித்தான் வாக்கு எண்ணிகை மையத்துக்கு அனுப்புவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு இருந்தது. இன்று மாலை அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு, வாக்குக்சாவடியின் பின்பக்க கதவை உடைத்து வாக்குப்பட்டியை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏறபட்டது.
இதையடுத்து உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீலை உடைக்கும் முன்பே பத்திரமாக மீட்டனர். வாக்குப்பெட்டியை திருடிச் சென்ற 2 பேரை போலீசார கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications