நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. 3 விஷயங்கள் மட்டுமே இலவசமாக கொடுப்பேன்.. அடித்து சொன்ன சீமான்!
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் ஆகிய 3 விஷயங்களை மட்டுமே கட்டணமில்லாமல் மக்களுக்கு கொடுப்பேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலவச பேருந்து வசதி கொடுக்க மாட்டேன் என்று கூறிய சீமான், ஏசி பஸ்ஸில் கட்டணம் செலுத்தி மக்கள் பயணிக்கும் சூழலை உருவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சூழலில், அத்தனை கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரமாக்கி இருக்கின்றன. நாதக சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு தொகுதிக்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், இலவசம் என்பதே ஏமாற்று. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். என் அம்மா, அப்பா உள்ளிட்டோர் கையேந்துவது தன்மான இழப்பாக இருக்கிறது. அதனால் இலவசத்தை எதிர்க்கிறேன். அதிமுக - பாஜக இரண்டும் கூட்டணியில் இருக்கிறதி. அப்படியென்றால் ஒரே மாதிரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கொள்ள வேண்டியது தான்.
ஏற்கனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை இருக்கும் போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.10 ஆயிரம் தருகிறேன்.. ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று சொல்வதும் ஏமாற்றுதான். நான் கட்டணம் இல்லாமல் 3 விஷயங்களை மட்டுமே கொடுப்பேன். கல்விக்கு கட்டணம் கிடையாது. ஃபின்லாந்து, கொரியா, சிங்கப்பூரை விடவும் சிறந்த கல்வியை கொடுப்பேன்.
மருத்துவத்தை இலவசமாக கொடுப்பேன். தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளை மாற்றுவேன். அதேபோல் குடிநீரை கட்டணமில்லாமல் கொடுப்பேன். என்னால் இலவசமாக பேருந்து சேவை கொடுக்க முடியாது. ஆனால் ஏசி பஸ் கொடுப்பேன். கட்டணம் கொடுத்து பயணித்து கொள்ளுங்கள் என்றே சொல்வேன்.
மதத்தை முன்னிறுத்தி உலகில் யாராவது அரசியல் செய்வானா? மதம் அதிகாரத்திற்கு வந்தால், அங்கு மனிதநேரம் செத்துவிடும். தொகுதி மறுசீரமைப்பை தேர்தலுக்கு பின்னரும் செய்யலாம் தானே.. SIR கொண்டு வந்தீர்கள்.. இறந்தவர்கள் சான்றிதழை வைத்தே அந்த பட்டியலில் இருந்து இறந்தவர்களை நீக்கலாம் தானே.. அதேபோல் தமிழ்நாட்டின் 3வது பெரிய சக்தியாக நாதக உள்ளது.
நான் காரைக்குடி தொகுதிக்கான ஆள் அல்ல.. ஒட்டுமொத்த நாட்டிற்குமான ஆள்.. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இன்னும் சில நாட்களில் காரைக்குடி தொகுதியில் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சீமானின் பிரச்சாரத்திற்கு பின் காரைக்குடி தொகுதியில் நாதகவுக்கு சாதகமான சூழல் உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications