புதுக்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வாழ்நாளில் மறக்க மாட்டார்.. தலைகீழாக மாற்றிய ஒரே ஒரு ரசீது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே பன்னிரெண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி என்ற விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கும் இடையே வேலி அமைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வீரமணி புகார் கொடுத்தார். அவரிடம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் 10000 லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்க ரசாயனம் தடவிய நோட்டுகளை தருகிறார்கள். அந்த நோட்டுகளை வாங்கும் அதிகாரிகள் அப்படியே சிக்கி கொள்வார்கள்.

அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்வார்கள். அப்படி கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அந்த வழக்கை அவர்கள் பணியில் சேர்ந்தாலும் எதிர்கொள்ள வேண்டும். குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க போராட வேண்டியதிருக்கும். இந்த பிரச்சனை இப்போது பல அரசு ஊழியர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே பன்னிரெண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த 54 வயதாகும் வீரமணி என்ற விவசாயிக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயிக்கும் இடையே வேலி அமைப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19-ந்தேதி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் விவசாயி வீரமணி புகார் கொடுத்திருந்தாராம்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வீரமணி விரும்பி உள்ளார்.அதற்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு ரசீது தேவைப்பட்டது. இதனால் கடந்த 8-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் தான் அளித்த புகார் மனுவுக்கு ரசீது தரும்படி கேட்டிருக்கிறார்.
இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமணி இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், ஜவகர் மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு வீரமணியை அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்படி அந்த பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் வீரமணி கொடுத்தார். அதனை சங்கர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications