இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக இலங்கை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இது போன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு கோரியும் மத்திய அரசை தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

fishermen puthukottai sri lanka navy

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் தொடர்ந்து இது தொடர்பாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து இன்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தனர். இதில் மீனவர்கள் 4 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளது. இதேபோன்ற கடந்த ஜூலை 11 ஆம் தேதி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தது. இதேபோன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியது. இதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்தது. மேலும் விசைப்படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்தனர். இதில் நீரில் மூழ்கியதில் தமலைச்சாமி (வயது 59) என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+