ஸ்விம்மிங்கில் கண்ணாடி விரியன் பாம்பு.. குளிக்க போன விராலிமலை வெங்கட்ராமன்.. தண்ணி மூடியை திறந்தால்?
புதுக்கோட்டை: புதுக்கோட்டை விராலிமலை வெங்கட்ராமன் குளிப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மூடியை திறந்துள்ளார்.. அடுத்த நொடியே, அதிர்ச்சியில் அலறியிருக்கிறார்.. ஆட்டோ டிரைவர் வெங்கட்ராமன் குடிநீர் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தால், அமைதியாக நீந்தி கொண்டிருந்ததாம் விஷத்தன்மை மிகுந்த கண்ணாடி விரியன் பாம்பு. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
ஈரப்பதம், நீர் சொட்டுதல், நீர்க்கசிவு போன்றவை பாம்புகளை ஈர்க்கக்கூடியவையாக உள்ளன.. அவைகளுக்கு குடிக்க தண்ணீர் தேவைப்படுகிறது..

எனவே ஈரமான இடத்தை கண்டால், அவற்றை பாம்புகள் மறைவிடமாக மாற்றிக் கொள்கின்றன.. அதனால்தான் சமையலறையில், கழிவறையில் எங்காவது ஏதேனும் கசிவு இருந்தால், அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்கிறார்கள்.. சிங்க்கின் கீழ்ப்பகுதியில்கூட தண்ணீர் தேங்க அனுமதிக்கக்கூடாது.
குடிநீர் தொட்டி
ஆனால் பல நேரங்களில் குடிநீர் தொட்டிகளிலும் பாம்புகள் நீர் தேடி வந்துவிடுகின்றன... சமீபத்தில் புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் பிள்ளைச்சாவடி பகுதி வீடுகளுக்கு செல்லும் தண்ணீர் கலங்கலாகவும், துர்நாற்றத்துடனும் சென்றுள்ளது..
ஒருகட்டத்தில் குழாயில் தண்ணீரே வராமல் போய்விட்டது. இதனால் குடிநீர் குழாயில் பார்த்தபோது, பாம்பு தோல் அடைத்துக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. பாம்பு எப்போது குழாயில் சென்றது என்றுகூட தெரியவில்லை.. பிள்ளைச் சாவடி குடிநீர் தேக்க தொட்டியை சுத்தப்படுத்தப்பட்டது என்றாலும், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அங்கு விலகவில்லை.
வாந்தி, மயக்கம்
சில நாட்களுக்கு கர்நாடகாவிலும், உத்தர கன்னடாவில் கவுலிவாடா என்ற இடத்தில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. இங்குள்ள குடிநீர் தொட்டியை பயன்படுத்தி வரும் நிலையில், திடீரென அங்குள்ளவர்களுக்கு வாந்தி, பேதி, தலைவலி ஏற்பட்டுள்ளது.. 8 பேர் மயங்கி விழுந்துள்ளனர்.. உடனடியாக அனைவரும் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்...
சுகாதார துறையினரும் விரைந்து வந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினார்கள்... குடிநீர் தொட்டியையும் ஆய்வு செய்ய போனார்கள். ஆனால், அதற்கு முன்பே அந்த தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியது.. அதற்குள் பார்த்தால் பாம்பு ஒன்று இறந்து கிடப்பது தெரிந்தது. இதற்கு பிறகு தொட்டி சுத்தப்படுத்தப்பட்டது என்றாலும் அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் விலகவில்லை.
புதுக்கோட்டை கண்ணாடி விரியன்
இதோ நம்முடைய விராலிமலையிலும் ஒரு அசாதாரண சம்பவம் நேற்று நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஆட்டோ டிரைவர் வெங்கட்ராமன்..
இவர் குளித்து விட்டு வேலைக்கு கிளம்புவதற்காக வீட்டின் முன்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு சென்றார்... தண்ணீர் எடுக்க தொட்டியின் மூடியை தூக்கி பார்த்தபோது, பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.. தொட்டியின் அடிப்பகுதியில் விஷதன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஜாலியாக நீந்திக்கொண்டிருந்ததாம்..
விராலிமலை வெங்கட்ராமன்
குளிக்கப் போன வெங்கட்ராமன் பாம்பை பார்த்ததுமே நடுநடுங்கி போய்விட்டார்.. தொட்டிக்குள் பாம்பு என்று கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. தொட்டிக்குள் எட்டிப்பார்த்து பாம்பை பார்க்க முண்டியடித்தனர்..
இதுகுறித்து உடனடியாக ஊராட்சி அலுவலர்களுக்கு தகவல் தரப்பட்டது. சிறிது நேரத்தில் ஊழியர்கள் விரைந்து வந்து குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர்.. பாம்பை எப்படி வெளியே எடுப்பது என்று திட்டமிட்டனர்..
பிறகு சுருக்கு கயிறு பயன்படுத்தி மிக லாவகமாக பாம்பை தொட்டிக்குள் இருந்து எடுத்து மேலே கொண்டு வந்து, பிறகு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் எடுத்து சென்று விட்டனர்.. குடிநீர் தொட்டிக்குள் பாம்பு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications