அட நம்புங்க.. நம்ம தமிழ்நாட்டில்தான்.. மேடையில் தொண்டருக்கு குடை பிடித்த எம்.எல்.ஏ... நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: இன்றைய நவீனகால அரசியலில் சாதராண கவுன்சிலர்களே பகட்டு பந்தாவுடன் காரில் வந்து இறங்குகின்றனர். அதுவும் ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ என்றால் கேட்கவே வேண்டும்? பந்தோபஸ்து பயங்கரமாக இருக்கும்.

அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் இரண்டு, மூன்று கார்கள் உடன் வரும். கூடவே பாதுகாப்புக்கு கட்சி பிரமுகர்கள், காவலர்கள் என பெரும் பட்டாளமே சூழ்ந்திருக்க கம்பீரமாக நடைபோட்டு வருவார் எம்.எல்.ஏ.

ஆச்சரியப்படுத்திய கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ

ஆச்சரியப்படுத்திய கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ

அதிலும் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் கூடவே வரும் கட்சி தொண்டர்களை சிறிதளவும் மதிப்பது இல்லை என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கலாம்; கேட்டிருக்கலாம். ஆனால் இந்த கலியுகத்தில் இப்படி ஒரு எம்.எல்.ஏ.வா? அதுவும் நமது தமிழ்நாட்டிலா? என்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ எம்.சின்னதுரை.

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.யு.சின்னப்பா பூங்காவில் இரவில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.சின்னதுரை கலந்து கொண்டார். கூட்டத்தில் எம்.எல்.ஏ பேசி முடித்த பிறகு கட்சி உறுப்பினர் ஜெகன் நன்றி தெரிவித்து பேசினார்.

 தொண்டருக்கு குடை பிடித்தார்

தொண்டருக்கு குடை பிடித்தார்

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. திறந்தவெளி மேடை என்பதால் பேசி கொண்டிருந்த உறுப்பினர் ஜெகன் மழையில் நனைய தொடங்கினார். இதை கவனித்த உறுப்பினர்கள் உடனடியாக ஒரு குடையை கொண்டு ஜெகன் பக்கம் சென்றனர். அப்போது அந்த குடையை வாங்கிய எம்.எல்.ஏ சின்னதுரை தானே ஜெகனுக்கு குடை பிடித்தார் உறுப்பினர் ஜெகன் பேசி முடிக்கும் வரையிலும் எம்.எல்.ஏ சின்னதுரை அவருக்கு குடை பிடித்தார்.

பாராட்டு மழை பொழிகிறது

பாராட்டு மழை பொழிகிறது

தான் ஒரு எம்.எல்.ஏ என்ற பகட்டு இல்லாமல் கட்சித் தொண்டருக்கு சின்னதுரை குடை பிடித்தது உறுப்பினர் ஜெகனையும், அங்கு இருந்தவர்களையும் நெகிழ்ச்சி அடையச்செய்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி போனார்கள். ''மார்க்சிய பாதையில் கடமை தவறாது மக்கள் பணி செய்யும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்'' என்று பலரும் எம்.எல்.ஏ சின்னதுரைக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+