வேங்கைவயலில் குடிநீர் தொட்டியின் மீது ஏறி சுதர்சன், முத்துகிருஷ்ணன் செல்பி!
புதுக்கோட்டை: வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலப்பதற்கு முன்னர் சுதர்சனும் முத்துகிருஷ்ணனும் செல்ஃபி எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு பஞ்சாயத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியிலிருந்து வந்த குடிநீரிலிருந்து கெட்ட வாடை வீசியது.

இதையடுத்து தொட்டி மீது ஏறி பார்த்த போது தொட்டியில் மலம் மிதந்ததாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி கனகராஜ் என்பவர் புகார் கொடுத்தார். குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் அனைவரையும் அதிர வைத்தது. ஒரு சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மற்றொரு சமூகத்தினர் மனிதக் கழிவை கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சிபிசிஐடி போலீஸார், புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டி மீது முத்துகிருஷ்ணனும் சுதர்சனும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சென்றதும் அங்கு செல்ஃபி எடுத்துக் கொண்டதாக ஒரு போட்டோவும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் வெளியிட்ட எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டி மீது முத்துகிருஷ்ணனும் சுதர்சனும் மேல்நிலை தொட்டிக்கு சென்றதும் செல்ஃபி எடுத்து கொண்டதாக தகவல். இது நியூஸ் 18க்கு கிடைத்த பிரத்யேக படங்கள் என அந்த எக்ஸ் பதிவில் குறிப்படப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications