40 ஆண்டுகளில் யாரும் செய்யாத சாதனையை 2 மாதங்களில் சாதித்த விஜய்.. விஜயபாஸ்கர் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. வரவேற்கத்தக்க சில மாற்றங்கள் இருந்தாலும் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மீது விமர்சனங்களும் இருக்கின்றன. 40 ஆண்டுகளாக யாரும் செய்யாத சாதனையை 2 மாதங்களில் முதலமைச்சர் விஜய் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "என் அன்பு மாப்பிள்ளை அமைச்சர் முகமது பர்வேஸ்க்கு வாழ்த்துகளை, பாராட்டுகளை, நன்றியை அன்போடு தெரிவித்து கொள்கிறேன். என்ன வேண்டும் மாமா. என்ன செய்யணும். எப்படி செய்யணும் என்று கேட்கிறார். 100 நாட்களில் இந்த மாவட்டம் பல திட்டங்களை கண்டுள்ளது. எல்லா பகுதிக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வருகிறார் மாவட்ட அமைச்சர். முதலமைச்சர் வெளிப்படையான ஆட்சி வழங்குகிறார்.

Vijayabaskar

40 ஆண்டுகளில் செய்யாத சாதனை

சட்டமன்றத்தை லைவில் காட்ட வேண்டும் என்று 40 ஆண்டுகளாக எல்லாரும் கேட்கிறார்கள். நான் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். பல விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறோம். சபாநாயகரிடம் எங்கள் ஸ்பீச் காப்பியை வாங்க வேண்டுமென்றால் இரண்டு நாள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 10 முதல் 30 செகண்ட் வீடியோ கிடைக்கும். இன்றைக்கு சட்டமன்றத்தில் லைவாக காட்டுகிறார்கள்.

நம் அமைச்சர் பேசுவதை லைவில் பார்த்தோம். எங்கள் செயல்பாடுகளை லைவில் பாருங்க என்று தவெக சாதனை செய்துள்ளது. அதற்கு ஒரு துணிவும், நெஞ்சுரமும் வேண்டும். ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் அதை சாதித்து காட்டியுள்ளது. இந்த ஆட்சி கறைபடியாத ஆட்சி. நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். எங்கள் நோக்கம் சிந்தனை என்ன என்பதை ஓப்பனாக காட்டுகிறார்கள்.

எல்லா தேர்தலிலும் தவெக

தொட மாட்டோம். தொடவிட மாட்டோம். தொட்டவர்களை விட மாட்டோம் என்று கூறிய ஒரே முதலமைச்சர் இவர் தான். எங்கு போனாலும் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று வரவேற்கிறார்கள். இளைஞர்கள் அதிகம் வருகிறார்கள். எல்லாரும் அன்பு தம்பிகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிற்கிறார்கள். பார்த்தேன். ரசித்தேன். வியந்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த கொடியை டூ வீலரில் வைத்து பயணிக்கிறார்கள்.

நெஞ்சில் தளபதியை தாங்கி தவெக.. தவெக என கோஷமிட்டு செல்கிறார்கள். இந்த படை போதுமா இன்னும் வேணுமா என்று ஆரவாரமாக உள்ளனர். இனி எந்த தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் தவெக தான் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல்க இருந்தாலும் சரி, கூட்டுறவு தேர்தலாக இருந்தாலும் சரி எல்லாரும் எதிர்பார்க்கிற இடைத்தேர்தல் என்றாலும், எந்த தேர்தலாக இருந்தாலும் சரி.

தென்னிந்தியா முழுவதும்

வெற்றி தவெகவுக்கு மட்டும் தான். இரண்டரை வயது குழந்தை கூட அம்மா, அப்பா என்று சொல்லிவிட்டு பிறகு விஜய் மாமா என்று கூறுகிறது. மப்ளரை போட்டு 3 வயது குழந்தை நம் தலைவர் பேசுவதை சொல்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களிலும் கூட்டம் அலறிவிடுகிறார். தென்னிந்தியா முழுவதும் மக்கள் விரும்பும் ஒரே தலைவர் விஜய் மட்டும் தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+