பொட்டலத்தை தூக்கி காட்டியதுமே விழித்த புதுக்கோட்டை விஜயபாஸ்கர்! அதுவும் நயினார் நாகேந்திரன் முன்பு
புதுக்கோட்டை: "அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு போடப்பட்ட தவறான வழக்கு இந்த குட்கா வழக்கு.. நீதி கிடைக்கும் என எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக வாதாடி நிரபராதி என நிரூபிப்போம்" என்று விடாமல் கூறி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.. எனினும் குட்கா வழக்கில் வசமாக சிக்கியதுமே, விஜயபாஸ்கரின் இமேஜ், மெல்ல மெல்ல அதிமுகவுக்குள்ளேயே சரிய துவங்கிவிட்டது என்றார்கள் அரசியல் விமர்சகர்கள். இப்படிப்பட்ட சூழலில், புதுக்கோட்டையில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு 2015ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது.. ஆனால் அடுத்த ஆண்டே, சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் மாதவ ராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா பொட்டலம்
இந்த சோதனையில், குட்கா பொருட்களை சட்ட விரோதமாக விநியோகம் செய்ய ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரங்களுடன் டைரி சிக்கியது. அதில் அப்போதைய அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெயரும் இடம்பெற்றிருந்தது.. இதுகுறித்த சிபிஐ விசாரணை நடந்தாலும், பதவியிலிருக்குபோதே தமிழக அமைச்சர் ஒருவர் இப்படி சிக்கியது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கோடுத்தும், எடப்பாடி பழனிசாமியின் மவுனம் மீண்டும் அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியது.
வருமான வரிதுறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகளை முடக்கி உத்தரவிட்டதும், அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது... இதற்கு பிறகு எதிர்க்கட்சிகளையும் தாண்டி, சில அதிமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும்கூட, விஜயபாஸ்கருக்கு எதிராக குரல் எழுப்பியிருந்ததை மறுக்க முடியாது.
கரும்புள்ளி சம்பவம்
கொரோனா காலத்தில் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்பட்டதாக கூறினாலும்கூட, இந்த குட்கா விவகாரம் அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய கரும்புள்ளியாகவே இருக்கிறது.
இந்நிலையில், தர்மசங்கடமான சம்பவம் ஒன்று நேற்றைய தினம் நடந்துள்ளது.. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" என்ற பெயரில் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பிரச்சார பயணத்திற்கு அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.. அந்தவகையில, அதிமுக தரப்பில் இருந்தும் இந்த ரதயாத்திரைப் பயணத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
புதுக்கோட்டை விஜயபாஸ்கர்
அந்தவகையில், கடந்த 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் பயண விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வில், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் வைரமுத்துவும் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.
அப்போது அறந்தாங்கி வாசி திடலில் நிறுத்தப்பட்டிருந்த பிரச்சார வாகனத்தில் நயினார் சிறப்புரை ஆற்றிக் கொண்டிருந்தார்.. அப்போது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளும் அதே வாகனத்தில்தான் நின்று கொண்டிருந்தனர்..
திமுக அரசு மீது தாக்குதல்
நயினார் நாகேந்திரன் அப்போது பேசும்போது, "மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டினம் அரசுப் பள்ளிக்குச் செல்ல சாலை வசதி இல்லை என்று இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் அறிவித்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலின்போது ஒரு பேச்சு, இல்லாவிட்டால் ஒரு பேச்சு.. இது தான் அவர்கள் மூச்சு.
அவர்களின் ஒரே தேவை உதயநிதியை, முதலமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்பதுதான், வேறு எந்த விஷயத்திலும் அவர்களுக்கு ஈடுபாடு கிடையாது, மக்கள் நலனில் எந்த நோக்கமும் கிடையாது" என்றெல்லாம் திமுக அரசை தாக்கி பேசிக் கொண்டிருந்தார்.
பொட்டலத்தை காட்டிய நபர்
அப்போது திடீரென கூட்டத்தில் நின்றிருந்த ஒருவர், "தலைவரே குட்கா பத்தி பேசுங்க" என்று சத்தமாக சொன்னார். அத்துடன், தன் கையில் வைத்திருந்த குட்கா பொட்டலத்தையும் தூக்கிக் காட்டினார்.
10 அடி தூரத்தில் நின்று அந்த நபர் பேசியது, பிரச்சார வாகனத்தில் இருந்த அனைவருக்குமே தெளிவாக கேட்டது.. இதனால் நயினார் நாகேந்திரன், விஜயபாஸ்கர், வைரமுத்து போன்றோர் அதிர்ச்சியடைந்தனர். சட்டென அவர்களது முகமும் மாறிய நிலையில், அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் திகைத்தனர்.
மீண்டும் அதிர்ச்சி
பிறகு குட்கா பொட்டலத்தைத் தூக்கி காட்டியவரின் அருகிலிருந்தவர்கள், "முதல்ல பொட்டலத்தை கீழே இறக்குங்க, இது தப்புங்க, கைய கீழே போடுங்க என்று சொல்லி கொண்டே, அந்த நபரின் கையை இறக்கினார்கள்.
குட்கா விவகாரத்தில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் விஜயபாஸ்கருக்கு, இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை தந்துவிட்டது.. அத்துடன் புதுக்கோட்டையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications