புதுக்கோட்டையிலிருந்து "புரூடா" விட்ட ஆபீசர்.. என்னாது 125 கோடி ரூபாயா.. இதென்ன புது தினுசா இருக்கே
புதுக்கோட்டை: பொங்கல் பரிசு தொகுப்பில், தொழில் அதிபர் ஒருவர் வசமாக சிக்கி உள்ளார்.. இது தொடர்பாக போலீசார் செய்த அதிரடியை பாருங்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது பயாஸ்.. 40 வயதாகிறது.. வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை சொந்தமாகவே நடத்தி வருகிறார்.

சுகைல்: இந்நிலையில், இவருக்கு முகமது சுகைல் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.. சுகைலுக்கு 32 வயதாகிறது.. கும்பகோணம் சோழபுரத்தை சேர்ந்தவர்.. தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு "பை" தயாரித்து வழங்கும் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருவதாக சுகைல் சொல்லி உள்ளார்..
பொங்கல் தொகுப்பு "பை" தயாரித்து தருவதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால், இந்த தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பயாஸிடம் சுகைல் சொல்லி உள்ளார்.
பொங்கல் பரிசு: அதாவது, ஒரு லட்சம் பொங்கல் பரிசு தொகுப்பு பைகளுக்கு ரூ.22 லட்சம் லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.. இதைக்கேட்டதுமே பயாஸுக்கும் சபலம் துளிர்த்துவிட்டது.. எனவே, முதல்கட்டமாக ரூ.50 லட்சமும், அடுத்த கட்டமாக ரூ. 25 லட்சமும் பயாஸ் வழங்கியிருக்கிறார்.. அவர் தந்த இந்த தொகைக்கு வட்டியாக ரூ.19 லட்சத்தை சுகைல் வழங்கியிருக்கிறார். அதாவது, அதிக வட்டி தருவதாக சொல்லிய நிலையில், அதிலிருந்தும் ரூ.10 லட்சத்தை கூடுதல் முதலீடாக பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல சுகைல் எந்த வட்டியையும் தரவில்லை.. பணத்தையும் தரவில்லை.. இது சம்பந்தமாக பயாஸ் பலமுறை கேட்டுப்பார்த்தும், பணம் எதுவும் கிடைக்கவில்லை.. உடனே இந்த விஷயத்தை பஞ்சாயத்துக்கு கொண்டுபோனார் பயாஸ்.. ஊர் முக்கியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
பஞ்சாயத்து: அப்போது சுகைல் ஊர் பெரியவர்களிடம் சொல்லும்போது, ரூ.5 கோடிக்கு ஏலச்சீட்டு போட்டிருப்பதால், அதற்கு தவணை தொகை செலுத்த ரூ.50 லட்சம் கிடைக்கும்.. அந்த சீட்டை எடுத்து, சுகைலுக்கு பணத்தை தந்துவிடுவாக சொன்னார்.. உடனே இதையும் நம்பி ரூ.5௦ லட்சத்தை முகமது பயாஸ், சுகைலுக்கு தந்துள்ளார்..
அதாவது, மொத்தம் ரூ.1.35 கோடியை, சுகைலுக்காக, பயாஸ் தந்துள்ளார்.. ஆனால், கடைசிவரை ஒரு பைசாவைகூட, பயாஸுக்கு, முகமது சுகைல் தரவில்லை.. மாறாக, மிரட்டல் விடுக்க துவங்கினார்..
விசாரணை: இதற்கு பிறகுதான் வேறுவழியின்றி, எஸ்பி ஆபீசுக்கு சென்று பயாஸ் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் விசாரணையை மேற்கொண்டனர்.. போலீசார் தலையிட்டதையடுத்து, தற்காலிகமாக வெறும் ரூ.10 லட்சத்தை மட்டும் பயாஸுக்கு தந்துள்ளார்... மிச்ச பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். எனவே, எஸ்பி அலுவலகத்தில் மறுபடியும் இன்னொரு புகார் தந்தார் பயாஸ்.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, சுகைலை கைது செய்தனர்.. இதுவரை வாங்கிய தொகைகளை, பயாஸுக்கு திருப்பித்தருவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளாராம்.. இப்போது புதுக்கோட்டை ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் சுகைல்...!!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications