"உறவு"க்கு தடை.. காபியில் 5 விஷ மாத்திரை, அரைலிட்டர் பெட்ரோல் ஊற்றி".. மாமியாரை எரித்த மருமகள் பகீர்

புதுக்கோட்டையில் மாமியாரை எரித்து கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: காபியில் 5 தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்து, தூங்கி கொண்டிருந்த மாமியாரை தீ வைத்துஎரித்தே கொன்றுவிட்டார் மருமகள்!

வரதட்சணை கொடுமை, சித்ரவதைகளால் ஸ்டவ் வெடித்தது எல்லாம் அந்த காலம்.. இப்போது நிலைமையே தலைகீழாகி வருகிறது.

சென்ற வருடம் தஞ்சாவூரில் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் மாமியார் ஒருவர், மருமகளின் வயிற்றிலேயே மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொன்றார்.. ஆனால் புதுக்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

வல்லக்கோட்டை அருகிலுள்ள மணியம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்.. ஒரு மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு 2 வருடத்துக்கு முன்பு பிரதீபா என்பவருடன் திருமணம் நடந்தது. 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

100 நாள் வேலை

100 நாள் வேலை

ரமேஷின் அப்பா டீ கடை வைத்துள்ளார்.. அம்மா ராஜம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு 58 வயதாகிறது. இந்நிலையில், நேற்று திடீரென வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது.. துர்நாற்றமும் சேர்ந்து வீசவும் அந்த பகுதி மக்கள் பதறி அடித்து கொண்டு ஓடிவந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தால் ராஜம்மாள் தீயில் கருகியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. அவரை உடனடியாக மீட்டு புதுக்கோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் உயிர் பரிதாபமாக பிரிந்தது.

பிரதீபா

பிரதீபா

இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது 23 வயது மருமகள் பிரதீபாவின் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சந்தேகம் வரவும், அவரை தனியாக அழைத்து விசாரித்தனர். அப்போதுதான அதிர்ச்சி தகவலை பிரதீபா சொன்னார்.. "நான் டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளேன்.. கல்யாணத்துக்கு என் வீட்டில் வரதட்சனை தந்தும், என் மாமியார் ராஜம்பாள் இன்னும் வேண்டும் என்று அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்தார்.

கொடுமை

கொடுமை

எல்லாவற்றையும் பொறுத்து கொண்டுதான் போனேன்.. வரதட்சணை கொண்டு வந்து தரும்வரை கணவனுடன் நான் ஒன்றுசேரக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தார்.. சந்தோஷமாக நாங்கள் இருந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.. இதெல்லாம் தாங்க முடியாமல்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.. சம்பவத்தன்று 100 நாள் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார்.. காபி போட்டு தரும்படி கேட்டார்.. அப்போதுதான் நான் 5 தூக்க மாத்திரையை காபியில் கலந்து தந்தேன்.. அதைகுடித்துவிட்டு படுத்து தூங்கி விட்டார்.

அலறல்

அலறல்

உடனே நான், என் மாமியார் உடம்பில் அரை லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டேன்.. வீட்டின் வெளிக்கதவையும் பூட்டிவிட்டு வந்துவிட்டேன்.. அவர் அலறியும் காது கேட்காததுபோல இருந்துவிட்டேன்" என்றார். பிரதீபாவிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. சந்தோஷமாக வாழ முடியவில்லையே என்று மாமியாரை கொன்ற பிரதீபா இன்று ஜெயிலில் உள்ளார்.. அந்த 9 மாத பெண் குழந்தை நிலை என்னாகுமோ தெரியவில்லை!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+