உடலை குத்திக்கிழித்த காளை.. நாளை வெளிநாடு பயணம்.. இன்றுபோன உயிர்..மஞ்சுவிரட்டில் இளைஞர் பலி..சோகம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நடந்த நிலையில் பார்வையாளராக சென்ற 25 வயது இளைஞரை காளை பயங்கரமாக முட்டியது. நாளை வெளிநாடு செல்ல வேண்டிய நிலையில் அந்த இளைஞர் இன்று பலியானார். இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை போன்று மஞ்சுவிரட்டும் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் மஞ்சு விரட்டு போட்டிகள் பிரபலமாகும்.
மஞ்சு விரட்டு என்பது ஜல்லிக்கட்டு போட்டி போன்று இருக்காது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் ஒவ்வொன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்படும் நிலையில் வயல்வெளியில் நடக்கும் மஞ்சு விரட்டில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்படும்.

சிவராத்திரியையொட்டி மஞ்சுவிரட்டு
இதனால் ஒரே நேரத்தில் பல காளைகள் களத்தில் நிற்கும். இதனால் போட்டியை பார்க்க செல்லும் நபர்கள் தங்களின் வாகனங்களின் மீது ஏறி நிற்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தான் மகாசிவராத்திரியையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் வார்பட்டு கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இங்கு ஆண்டுதோறும் போட்டிகள் நடக்கும் நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் மஞ்சுவிரட்டு நடந்தது.

500 காளைகள் பங்கேற்பு
இதில் தென்மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 500க்கும் அதிகமான காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தழுவினர். பல காளைகள் ஆக்ரோஷமாக யாரையும் அருகே கூட விடவில்லை. இந்த போட்டியை ஏராளமானவர்கள் வாகனங்கள் மீது நின்றபடி கண்டு களித்தனர். இந்த போட்டியை திருமயம் அருகே கண்டனூர் புதுவயல் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் சிவா(வயது 25) ரசித்து பார்த்தார்.

காளை முட்டி பலி
இந்த வேளையில் காளை ஒன்று அவரை கொம்புகளால் முட்டி தூக்கி எறிந்தது. இதில் பலத்த காயமடைந்த சிவா துடிதுடித்தார். இதைடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நாளை வெளிநாடு செல்ல..
காளை முட்டி இறந்துபோன சிவா வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை அவர் பணிக்காக வெளிநாடு புறப்பட்டு செல்ல இருந்த நிலையில் தான் மஞ்சுவிரட்டு போட்டியை பார்க்க சென்றார். இந்த வேளையில் எதிர்பாராதவிதமாக காளை முட்டி அவர் இறந்துள்ளார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications