விபரீத ஆசை.. ரூம் போட்டு மொத்தம் 16 பேரை.. இளம் பெண்ணின் "டேட்டிங்" துணிச்சல்.. ஷாக்கில் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

புனே: மொத்தம் 16 பேருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு, அத்தனை ஆண்களையும் ஏமாற்றிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

புனேவைச் சேர்ந்த பெண்ணுக்கு வயது 25தான் ஆகிறது.. இவருக்கு எந்நேரமும் டேட்டிங் செய்வதுதான் வேலை.. இதற்காகவே செல்போனில் ஒரு டேட்டிங் ஆப் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறார்.

இதை வைத்து ஆண்களை வளைத்து போடுவாராம்.. அவர்களுடன் பேசி, நட்பை ஏற்படுத்தி கொண்டு, ஒருகட்டத்தில் ரூம் போட்டு அவர்களுடனேயே தங்கி, இறுதியில் நகை, பணம், செல்போனை அபேஸ் செய்து கொண்டு ஓடிவிடுவாராம்.

 கைது

கைது

இப்படி 4 பேர் ஏமாந்து போலீஸில் புகார் தந்துள்ளனர்.. அதனால் 4 பேருமே போலீசில் புகார் தரவும், போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்ய முயன்றனர்.. ஆனால், இவரை கைது செய்வது பெரும் சவாலாக இருந்தது போலீசாருக்கு.. யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி, ஒவ்வொரு முறையும் டேட்டிங் பிளானை அந்த பெண் மாற்றி கொண்டே இருந்தார். அதனால், டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை ஏமாற்றுகிறாரோ, அதே டேட்டிங் ஆப் மூலம் போலியான புரொபைல் ஒன்றை போலீசாரே உருவாக்கினர்..

 டேட்டிங்

டேட்டிங்

அதன்பிறகு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் போல அந்த பெண்ணிடம் தொடர்பு கொண்டனர்... இப்போது வசமாக சிக்கி கொண்டார்.. அவரிடம் விசாரித்ததில், பெயர் சயாலி அலியாஷ் என்பதும், புனேவில் உள்ள ராதிகா அப்பார்ட்மென்டில் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர் குடும்பத்தில் எல்லாருமே நன்கு படித்தவர்களாம்.. இந்த பெண்ணும் டிகிரி முடித்துள்ளார்.. ஆனாலும் பணத்தின் மீது ஆசை அதிகமாகி உள்ளது.. காஸ்ட்லி வாழ்க்கை வாழவும் ஆசைப்பட்டுள்ளார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அதனாலேயே அவரது குறி செல்போன், நகை, பணம் என்று சுற்றி சுற்றி வந்திருக்கிறது. இத்தனை வருஷமாக பலரிடம் திருடியதையும் ஒப்புக் கொண்டார்.. இவரது அப்பா 10 வருஷத்துக்கு முன்னாடி இறந்துவிட்டாராம்.. ஒரு ஐடி கம்பெனியில் சயாலி வேலை பார்த்து வந்திருக்கிறார்.. ஆனால் லாக்டவுனில் ஐடி கம்பெனியை மூடிவிடவும் சயாலிக்கும் வேலை போய்விட்டது.. அம்மா ஒரு நோயாளி என்பதால், அவர் தூங்குவதற்கு டாக்டர்கள் தூக்க மாத்திரை தந்திருக்கிறார்கள்..

மாத்திரை

மாத்திரை

அந்த மாத்திரையை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஆண்களிடமும் நெருங்கி பேசி, ரூம் போட்டுள்ளார்.. பணக்கார ஆண்களை லாட்ஜில் அழைத்து சென்று, தூக்க மாத்திரைகளை தண்ணி அடிக்கும் சரக்கு அல்லது கூல் டிரிங்ஸ்-ல் கலந்து கொடுத்துவிடுவாராம்.. அந்த பணக்காரர் மயங்கி விழுந்ததும் தன் வேலையை காட்டுவாராம். திருடிய நகைகளை கொண்டு போய் அடகு வைத்து பணம் கேட்பாராம்..

 புற்றுநோயாளி

புற்றுநோயாளி

சந்தேகம் வரக்கூடாது என்று தன்அப்பா ஒரு புற்றுநோயாளி என்று செத்துபோன அப்பாவை எல்லாம் காரணம் காட்டுவாராம்... இப்போதைக்கு 15 லட்சம் ரூபாய் உட்பட செல்போன்களை போலீசார் சயாலியிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.. படித்த பெண், ஐடி கம்பெனியில் வேலை பார்த்த பெண், இப்படி 25 வயதிலேயே வாழக்கையை கெடுத்து கொண்டு, கம்பி எண்ணி கொண்டிருப்பதை என்ன சொல்வது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+