திருவிழாவுக்குச் சென்ற பக்தர்களுக்கு சோகம்.. சித்தேஷ்வர்நாத் கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் பலி
புனே: பீகார் மாநிலத்தில் உள்ள சித்தேஷ்வர்நாத் கோயில் திருவிழாவுக்குச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 35க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் உள்ள மக்தூம்பூர் பகுதியில் அமைந்துள்ளது பாபா சித்தேஷ்வர்நாத் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புனித ஷ்ராவண் மாதத்தில் கோலாகலமாகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். அப்போது, கடும் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

7 பேர் உயிரிழப்பு சம்பவத்தை அரசு நிர்வாகம் உறுதி செய்துள்ளது. உடனடியாக காயமடைந்தவர்கள் அனைவரும் மக்தும்பூர் மற்றும் ஜெகனாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.
இதுகுறித்து, கோயிலில் இருந்த பக்தர் ஒருவர் கூறுகையில், பூ விற்பனை செய்பவருடன் ஏற்பட்ட சண்டையில் தன்னார்வலர்கள் தடியடியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, கோயில் நிர்வாகத்தினர் அந்த இடத்தில் யாரும் இல்லை. காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினரின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடந்தது என்றார். இதனிடையே, கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் லத்திகளைப் பயன்படுத்தவில்லை என்று ஜெகனாபாத் துணைப் பிரிவு அதிகாரி விகாஷ் குமார் தெரிவித்து, குற்றத்தை மறுத்துள்ளார்.
இதுகுறித்து, ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெகனாபாத் மாவட்டத்தின், மக்தும்பூரில் உள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications