டி.ஆர்.பி முறைகேடு... பார்க்(BARC) அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி கைது!
புணே: தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் டி.ஆர்.பி(TRP) நடைமுறையில் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனத்தின் பார்க்(BARC) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்து வருகிறது.

தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் TRP நடைமுறையில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் முறைகேடு செய்து ஆதாயம் பெற்றதாக மும்பை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. பார்வையாளர் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட வீட்டினருக்கு பணம் தந்து குறிப்பிட்ட சேனலை மட்டும் ஓட வைத்து பார்வையாளர் மதிப்பீட்டு புள்ளிகளை உயர்த்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகினர். ஏற்கெனவே ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்ச்சந்தானி கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சி பார்வையாளர் மதிப்பீட்டு கணிப்பு நிறுவனமான BARC-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரோமில் ராம்கரியா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் BARC-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி புனேவை சேர்ந்த பார்த்தோ தாஸ்குப்தாவை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். புனேவின் ராஜ்காட் காவல் நிலைய குற்றவியல் புலனாய்வு பிரிவு போலீசார் பார்த்தோ தாஸ்குப்தாவை கைது செய்துள்ளனர்.
அவரை வெள்ளிக்கிழமை மும்பை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்துவர்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வழக்கில் மும்பை காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்படும் 15-வது நபர் பார்த்தோ தாஸ்குப்தா ஆவார்.இந்த வழக்கில் தங்கள் மீதான குற்றச்சாட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications