கிரிப்டோகரன்சி.. பணம் கொட்டும்.. பெண் டாக்டரின் ஆசையைத் தூண்டி 30 லட்சம் அபேஸ்
புனே: மகாராஷ்டிர மாநிலத்தில் கிரிப்டோகரன்சி மூலம் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பெண் மருத்துவரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தவரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்தப் பணத்தை மருத்துவர் பல வங்கிக் கணக்கு எண்களுக்கு தொடர்ந்து பணப் பரிமாற்றம் செய்து வந்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு வகைகளில் புதிய புதிய உத்தியுடன் மோசடி கும்பல் களம் இறங்குவதும், அதில் பொதுமக்கள் சிக்குவதும் நாள்தோறும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. இதுதொடர்பாக எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பணத்தின் மீது கொண்ட ஆசையால் ஏதாவது ஒரு வகையில் பொதுமக்கள் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். எளிய மக்கள் மட்டும்தான் சிக்குகின்றனரா என்றால் கண்டிப்பாக இல்லை. மெத்த படித்தவர்கள்கூட மோசடி கும்பலிடம் சிக்கி லட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கில் பணத்தை இழக்கும் சம்பவங்கள்தான் அதிகளவில் நடக்கின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரத்தில் மருத்துவரிடம் மொபைல் போன் மூலம் லட்டக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கோனி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான பெண் மருத்துவர். இவரது மொபைல் போனுக்கு கடந்த வாரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், தான் தாய்லாந்தில் இருந்து பேசுகிறேன். எனது முகவரிக்கு மூன்று பாஸ்போர்ட்டுகள், மூன்று சிம் கார்டுகள், சில மருந்துகளைக் கொண்ட ஒரு பார்சல் தனக்கு வந்துள்ளது. அந்த பார்சலில் உங்கள் பெயர்தான் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அவரிடம் கிரிப்டோகரன்சி குறித்தும் பேசியுள்ளார்.

மேலும், கிரிப்டோகரன்சி வாங்கினால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று மருத்துவரின் ஆசையைத் தூண்டியுள்ளார். இதையடுத்து, அந்த நபரின் வார்த்தையை நம்பிய பெண் மருத்துவர் தானும் கிரிப்டோகரன்சி வாங்குவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த நபர் சில வங்கிக் கணக்கு எண்களைக் கொடுத்து அதற்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனை நம்பி மருத்துவரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் இருந்து 6 ஆம் தேதி வரையில் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கிட்டத்தட்ட ரூ. 30,86,535 பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த நபரிடம் இருந்து மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, தான் வசமாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடி நபரைத் தேடி வருகின்றனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications