மகனுக்கு ஆண்மையில்லை.. மருமகளை படுக்கைக்கு அழைத்த ஓய்வு போலீஸ் அதிகாரி.. பெண் பரபரப்பு புகார்
புனே: புனேவில் தனது கணவருக்கு ஆண்மை இல்லாததால் ஓய்வு போலீஸ் அதிகாரியான மாமனாருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று தனது கணவர் மற்றும் மாமியார் துன்புறுத்துவதாக பெண் ஒருவர் பரபரப்பான புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் புனேவில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். சமீபத்தில் ஓய்வு போலீஸ் அதிகாரியின் மகனுக்கு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு புதுமண ஜோடி ஹனிமூன் சென்றனர். மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் மலை பிரதேசத்துக்கு இருவரும் சென்றனர். அங்கு இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபடவில்லை. குறிப்பாக போலீஸ் அதிகாரியின் மகன் தாம்பத்திய உறவுக்கு மறுத்துள்ளார்.
இதனால் அந்த பெண்ணுக்கு சந்தேகம் வந்துள்ளது. அதன்பிறகு வீடு திரும்பியபோதும் மனைவியை விட்டு விலகியே இருந்துள்ளார். அப்போது தான் அவருக்கு ஆண்மை குறைபாடு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் தனது மாமனார், மாமியாரிடம் கூறியுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் அவரது மாமியாரும், மாமனார் ஆகியோர் தங்களுக்கு பேரக்குழந்தைகள் வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்கு அந்த பெண் உங்களின் மகனுக்கு மருத்துவ சிகிச்சை பெறலாம். இல்லாவிட்டால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு மாமனாரான ஓய்வு போலீஸ் அதிகாரி உடன் படுக்கையை பகிரும்படி கூறியுள்ளனர்.
அதை கேட்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு அவர்கள் சொல்வதற்கு இணங்கவில்லை. இதற்கிடையே தான் அந்த பெண்ணிடம் அவரது மாமனாரான ஓய்வு போலீஸ் அதிகாரி தவறாக நடக்க முயன்றுள்ளார். அடிக்கடி அனுமதியின்றி அந்த பெண்ணின் அறைக்கு சென்று வந்துள்ளதோடு, உடலுறவு வைக்கவும் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொடர் தொல்லையால் நொந்துபோன அந்த பெண் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் ஓய்வு போலீஸ் அதிகாரி, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications