அடேங்கப்பா.. கொரோனாவிலும் ரணகளமா.. சங்கர் போட்டுள்ள மாஸ்க் விலை என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

புனே: புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருக்கும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் குராடே. இவர் ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான தங்க மாஸ்கை அணிந்து இருக்கிறார். இந்த மாஸ்க்கில் சிறிய அளவிலான துவாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Pune man Shankar Kurade is wearing golden mask worth Rs 2.89 Lakhs

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சங்கர் அளித்து இருக்கும் பேட்டியில், ''இந்த தங்க மாஸ்க் எந்தளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரியவில்லை. சிறிய துவாரங்கள் இந்த மாஸ்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுவாசிப்பதற்கு எந்தக் கஷ்டமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.

புனேவில் இருக்கும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் ஜூலை ஒன்றாம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,284 ஆக இருந்தது. உயிரிழப்பு 47 ஆக இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் தேசிய அளவில் 3.13% ஆக இருக்கிறது. இதுவே மகாராஷ்டிரா மாநில அளவில் 4.72% ஆக இருக்கிறது. புனே மற்றும் மாநில உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில், பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 1.4%ல் இருந்து 1.8% ஆக இருக்கிறது உயிரிழப்பு விகிதம் இருக்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பலருக்கும் இன்னும் மாஸ்க் கிடைக்காத நிலையில் சங்கர் தங்க மாஸ்க் அணிந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தங்க மாஸ்க் மட்டுமில்லை, கை விரல்கள் அனைத்திலும் தங்க மோதிரங்கள் அணிந்து, கழுத்தில் பெரிய தங்கச் செயின் அணிந்து தங்க மனிதராக தோன்றுகிறார்.

Recommended Video

    'மாஸ்க்' போடாமல் எதையெல்லாம் பயன்படுத்துறாங்க பாருங்க!

    பார்த்து சங்கர்ஜி.. முகத்தை மட்டும் ஆட்டையைப் போட்டுட்டுப் போயிடப் போறாங்க.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+