செல்பியால் ஏற்பட்ட விபரீதம்.. 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்.. மகாராஷ்டிரத்தில் பகீர் சம்பவம்
புனே: மகாராஷ்டிர மாநிலம், சதாரா மாவட்டம், போர்ன் காட் பகுதியில் செல்ஃபி எடுக்கும்போது 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பெண் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காகவும், லைக்ஸ்களை குவிப்பதற்காகவும் ஆபத்தான செல்பிக்கள் எடுக்கும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் ஆபத்தில்தான் சென்று முடிகின்றன. இந்நிலையில், சதாரா மாவட்டத்தில் உள்ள சுற்றுலாவுக்காகச் சென்ற நண்பர்கள் செல்பி எடுக்க முயன்றபோது 100 அடி பள்ளத்தாக்கில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புனேவைச் சேர்ந்தவர் நசீம் அமீர் குரேஷி (29). இவர், தனது ஏழு நண்பர்களுடன் சதாரா மாவட்டத்தில் உள்ள போர்ன் காட் பகுதிக்கு சுற்றுலாவுக்காக ஜூலை 16 ம் தேதி சென்றுள்ளார். தோசேகர் அருவியைப் பார்ப்பதற்காகத்தான் முதலில் நண்பர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆனால், பலத்த மழை மற்றும் காற்று காரணமாக தோசகர் அருவி மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர்கள் போர்ன் காட் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு நண்பர்கள் அனைவரும் செல்பி எடுத்துள்ளனர். அப்போது, நசீம் அமீர் எதிர்பாராதவிதமாக அருவிக்கு அருகிலுள்ள 100 அடி ஆழமான பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் சக மலையேறுபவர்கள் அந்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கயிறு மூலமாக பாதுகாப்பாக பள்ளத்தாக்கில் இருந்து நசீம் அமீரை வெளியே கொண்டு வந்தனர். அப்போது, நசீம் அமீர் கதறியபடியே மேலே வந்த சம்பவம் பார்ப்பவர்களை பதறச் செய்தது. இதையடுத்து, அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது நிலை இப்போது சீராக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நசீம் அமீர் 100 அடி பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் ராய்காட் அருகே உள்ள கும்பே நீர்வீழ்ச்சியில் பள்ளத்தாக்கில் விழுந்து 26 வயதான இன்ஸ்டாகிராம் பிரபலம் இறந்த சில நாட்களுக்குப் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாவை எந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறோமோ அதே அளவு பொறுப்புடனும் இருக்க வேண்டும். இயற்கையை ரசிக்கும்போது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தினர். சதாராவில் கனமழை பெய்து வரும் நிலையில் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. எனவே, இதுபோன்ற விபத்து சம்பவங்களைத் தடுக்க சுற்றுலாத் தலங்கள் மற்றும் அருவிகளை ஆகஸ்ட் 2 முதல் 4 ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திரதுடி உத்தரவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications