கல்யாணம் ஆயிருச்சு.. குழந்தையும் இருக்கு.. ப்ளீஸ் விட்ரு.. கெஞ்சிய பேராசிரியை.. கொளுத்திய இளைஞர்!
தீ வைத்து கொளுத்தப்பட்ட கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்
புனே: "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... குழந்தையும் இருக்கு.. ப்ளீஸ் என்னை விட்டுடு" என்று கெஞ்சியும்.. பட்டப்பகலில் காலேஜ் வாசலிலேயே பேராசிரியை ஒருவரை இளைஞர் பெட்ரோல் ஊற்றி எரித்தார்.. ஒரு வார கால தீவிர சிகிச்சையில் இருந்த பேராசிரியை இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்ரா மாநிலம் வார்தா பகுதியில் ஒரு கல்லூரி இயங்கி வருகிறது.. இங்கு பேராசிரியையாக வேலை பார்த்தவர் அங்கிதா பிசுட்.. வயது 25!
காலேஜுக்கு டீச்சர் வழக்கமாக பஸ்ஸில்தான் வந்துபோவார்.. பிறகு பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஹிங்னகாட் நகரில் கொஞ்ச தூரம் நடந்து செல்வார்.. அப்படித்தான் கடந்த வாரமும் நடந்து போனார்.. காலேஜ் வாசலில் சென்றபோது திடீரென ஒரு இளைஞர் பைக்கில் வந்து வழி மறித்தார்.

அலறினார்
கையில் கொடு வந்திருந்த பெட்ரோலை எடுத்து டீச்சர் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.. உடம்பெல்லாம் தீப்பற்றி அலறினார்... அந்த வழியாக சென்று கொண்டிருந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை பார்த்து உடனடியாக இறங்கி ஓடிவந்தனர்.. அந்த பகுதியில் இருந்த தண்ணீரை அள்ளி கொண்டு வந்து டீச்சர் மீது ஊற்றி அணைத்தனர்.

சிகிச்சை
பின்னர் படுகாயங்களுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு போய் அனுமதித்தனர்.. அதற்குள் ஆசிரியையின் உடம்பெல்லாம் கருகிவிட்டது.. 40 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான முறையில் சிகிக்சை பெற்று வந்தார். இது சம்பந்தமான விசாரணையில், டீச்சருக்கு கல்யாணம் ஆகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளதாம்.. ஆனால் கல்யாணம் ஆனது தெரிந்தும் விக்கி நாக்ரலே என்பவர் டீச்சரை விரட்டி விரட்டி காதலித்து லவ் டார்ச்சர் தந்துள்ளார்.

ஆத்திரம்
தனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று பலமுறை சொல்லியும் அந்த இளைஞர் கேட்கவே இல்லை.. தன்னை காதலிக்கும்படி, கல்யாணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.. இந்த ஆத்திரத்தில்தான் வழக்கமாக செல்லும் பாதையை தெரிந்து வைத்து கொண்டு பைக்கில் வந்து பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதிர்ச்சி
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த டீச்சர், பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.. காலேஜ் வாசலிலேயே டீச்சரை உயிருடன் எரித்து கொன்ற இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதில் என்ன ஒரு கொடுமை என்றால், தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, குழந்தையும் இருக்கிறதாம்!
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications