ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை; 3 படகுகள் சிறைபிடிப்பு

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மேலும் 12 பேரை இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் ஊடுருவி கைது செய்துள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் சிங்கள கடற்படை சிறைபிடித்துள்ளது.

இலங்கையில் இருந்து இந்தியாவின் கடல் எல்லைக்குள் ஊடுருவி சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து வருவது அண்மையில் அம்பலமானது. மேலும் சீனா ஆதரவு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவால் தமிழக மீனவர்களுக்கு எதிராக ஈழத் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12 Tamilnadu fishermen arrested by Srilanka Navy

இதன் உச்சமாக தமிழக மீனவர்களிடம் இருந்து சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அண்மையில் ஏலம்விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் டக்ளஸ் தேவானந்தா தூண்டுதலில் இந்த படகுகள் ஏலம் விடப்பட்டன.

இந்நிலையில் தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து என்ற பெயரில் ஊடுருவிய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி 12 பேரை கைது செய்தனர். அவர்களின் 3 படகுகளையும் சிறைபிடித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுவும் இந்தியாவிடம் கடன் வாங்குவதற்காக இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் டெல்லியில் முகாமிட்டிருந்த போதும் கூட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
12 Tamilnadu fishermen had arrested by Srilanka Navy on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X