Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமநாதபுரம் அருகே ராத்திரியில் பெரிய வேலை.. எல்லாமே சேலம் தோப்புக்குள்.. வசமாக சிக்கிய 2 பேர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற விவசாயி, தனக்கு சொந்தமான டிராக்டரை வீட்டின் அருகே நிறுத்தி வைப்பது வழக்கம். கடந்த ஜனவரி 6ம் தேதி இவரது டிராக்டரை சிலர் திருடி சென்றுவிட்டார்கள். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது ராத்திரியில் இரண்டு பேர் திருடி சென்றுள்ளார்கள். கைது செய்யப்பட்டுள்ள அவர்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழகத்தை பொறுத்தவரை பல ஊர்களில் திருடர்கள் ஊர் விட்டு ஊர் போய் திருடுகிறார்கள். கண்காணிப்பு கேமரா உள்ளதா அல்லது திருடப் போகும் வீட்டில் அல்லது கடையில் ஆள் நடமாட்டம் உள்ளதா, திருடினால் தப்பித்து போக வழி என்ன என்பதை முழுமையாக கண்காணிக்கிறார்கள். மாட்டிக்கொள்ளாமல் திருடுவதற்காக, முடிந்தவரை கண்காணிப்பு கேமரா இல்லாத பகுதிகளில் தான் திருடர்கள் கைவைக்கிறார்கள்.

ramanathapuram salem

அதையும் தாண்டி திருட சென்றால், கண்காணிப்பு கேமராவில் தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்து செல்கிறார்கள். சிலர் துணியால் முகத்தை மூடியபடி வந்து திருடுகிறார்கள். அப்படி கேமராவில் திருடும் இடத்தில் தப்பித்தாலும், திருடிய பின்னர் செல்லும் வாகனம், அந்த வழியாக செல்லும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளால் சிக்கி கொள்கிறார்கள்.

ஏற்கனவே திருடி சிறை சென்றவர்கள் என்றால், அவர்களை போலீசார் எளிதாக அடையாளம் கண்டு, கைது செய்துவிடுவார்கள். அதேநேரம் முதல்முறை திருடர்கள் அல்லது இதுவரை திருடி மாட்டியதே இல்லை என்கிறவர்களை பிடிக்க தீவிரமாக தேட வேண்டிய நிலை வரும். ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த திருட்டு பற்றி பார்ப்போம்.


ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்தவர் பிரபாகரன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான டிராக்டரை பணி முடிந்ததும் வீட்டின் அருகே நிறுத்தி வைப்பது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஜனவரி 6-ந்தேதி காலையில் விவசாய பணிக்காக டிராக்டரை எடுத்துச் செல்ல வந்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டர் மாயமாகி இருந்தது.

இதுகுறித்து தேவிபட்டினம் போலீசில் பிரபாகரன் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராக்களை சோதித்தனர். அங்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் டிராக்டரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த வீடியோவில் உள்ளவரை போலீசார் தேடினார்கள்.

இது தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பந்தப்பட்டவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரித்தனர். இறுதியாக இதையடுத்து திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை தேவிபட்டினம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் பிள்ளங்குளம் கிழக்கு காட்டுகோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 27), சேலம் மாவட்டம் புதூர் வடக்கு வீதி தொடவூர் பகுதியைச் சேர்ந்த தசரதன் (28) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று கார், டிராக்டர்களை திருடி சேலத்தில் உள்ள தோப்புக்கு கொண்டு சென்று அதில் உள்ள முக்கியமான பகுதிகளை கழற்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+