ராமநாதபுரம் அருகே பயங்கரம்.. கார் - வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலி.. 10 பேர் படுகாயம்
ராமநாதபுரம் அருகே கார்-வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட 2 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காரைக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தங்களது காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள்.

வேன் மீது மோதல்
அப்போது அவர்களது கார் சாத்தான்குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலா வேன் மீது திடீரென மோதியது.

2 பேர் பலி
வேனும்-காரும் நேருக்கு நேர் பலமாக மோதிக் கொண்ட இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் காரிலிருந்து ஒரு குழந்தை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

10-க்கும் மேற்பட்டோர் காயம்
மேலும் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் காயமடைந்த அனைவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
மீட்பு பணியின்போது, ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படுகாயமடைந்தவர்கள் யார் யார் என்ற விவரம் தெரியவில்லை. எனினும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications