Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுக்கடலில் பழுதான விசைப்படகு! 2 மீனவர்கள் உயிரிழப்பு! தடை காலம் முடிந்த முதல் நாளிலே சோகம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மீன் பிடிக்க சென்றபோது விசைப்படகு பழுதாகி கடலில் மூழ்கியதால் 3 மீனவர்கள் மாயமாகினர். இதில் 2 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கடலில் மூழ்கி மாயமான மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் அருகே மீன் பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதில் 3 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். பாம்பன் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியதில், படகு கடலில் மூழ்கியது. இதனால், மீனவர்கள் உயிருக்கு போராடினர். இதில், முகம்மது ஹனீபா, பிரசாத் இருவரும் கரைக்கு திரும்பிய நிலையில், 3 மீனவர்கள் மாயமாகியுள்ளனர்.

Ramanathapuram fishermen sea

3 மீனவர்கள் மாயம்: கடலில் மூழ்கி மாயமான பரக்கத்துல்லா, கலீல் ரகுமான், ஆரோக்கியம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 3 பேர் மாயமானதில் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கடலில் மாயமான மேலும் ஒருவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று முதல் மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் சென்றுள்ள நிலையில், முதல் நாளிலேயே படகு பழுதாகி 2 மீனவர்கள் பலியான சம்பவம் மீனவ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடி தடைக்காலம்: கோடை காலங்களிலேயே, மீன்களின் இனப்பெருக்கம் அதிகமாக நடைபெறும். இந்த காலகட்டத்தில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகளை பொரிக்கும்.. விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு, அந்த மீன் குஞ்சுகள் அழியும் நிலைமையே ஏற்பட்டுவிடும்.

எனவே வருடந்தோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்து, செயல்படுத்தியும் வருகிறது.

கடலோர மாவட்டங்கள்: தடைக்காலம் அமலுக்கு வந்துவிட்டால், கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுவிடும். இதன்காரணமாக, குறைந்த ஆழத்திலேயே சென்று, கிடைக்கும் மீன்களை பிடித்து விற்று வருவார்கள்.

தடைக்காலம் முடிந்தது: இந்த வருடமும் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மண்டபம் பகுதி உள்பட தமிழக கடலோரப் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்களது படகுகளை கடலோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தார்கள். தடைகாலம் முடிந்துள்ளதால் இன்று முதல் மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+