திருமண பேனரில் ஜாதகம்.. "மாப்பிள்ளை நாங்கதாங்க" நண்பர்கள் "அட்டூழியம்".. புகைச்சலில் 90ஸ் கிட்ஸ்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் திருமண நிகழ்ச்சியொன்றில் நண்பர்கள் வைத்த பேனர்தான் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
திருமணம் உள்ளிட்ட வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் பேனர் அடிக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. சிலர் அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்களை, கடவுள் படங்களை வைத்துக் கொள்வார்கள்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வைத்தும் பேனர் அடிப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக பேனரில் எழுதப்படும் வசனம் பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என வித்தியாசமான வசனங்களை எல்லாம் அச்சடித்து வருகிறார்கள்.

கட்அவுட்
அதிலும் கட் அவுட்டுகளில் மணமக்களின் நண்பர்களின் மனக்கோட்டைகளில் மலர்ந்த வசனங்களுக்கு எல்லையே இல்லை என கூறலாம். அந்த வகையில் ராமநாதபுரத்தை சேர்ந்த மணமக்கள் நவீன்ராஜ், லாவண்யா திருமணம் அரண்மனை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மணமகனின் நண்பர்கள்
மண்டபத்திற்கு வெளியே மணமகனின் நண்பர்கள் வைத்திருந்த பேனர் சமூகவலைதளங்களில் வைரலாகி சிரிப்பை வரவழைத்துள்ளது. அந்த பேனரில் மணமக்கள் புகைப்படத்திற்கு கீழ் ஜாதக வடிவில் மணமகனின் நண்பர்கள் தங்கள் புகைப்படம், பெயர், ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு "கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளைங்க நாங்க" என்ற வசனத்துடன் பேனர் வைத்துள்ளனர்.

90 கிட்ஸ்
இந்த பேனரை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஒரு நிமிடம் நின்று பார்த்து புன்னகைத்து சென்றனர். அதே நேரத்தில் 80 மற்றும் 90களில் பிறந்து இன்று வரை திருமணம் ஆகாமல் உள்ள அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த பேனரில் என்னோட போட்டோவையும் சேர்த்து போட்டிருக்கலாமே என "உச்" கொட்டியபடி கடந்து சென்றதையும் பார்க்க முடிந்தது.

திருமண வரவேற்பு
நண்பர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு வகையில் வரவேற்பு பேனர் அடித்து வைத்து தங்களின் அன்பை வெளிப்படுத்தும் நிலையில், நண்பருக்கு வாழ்த்து சொன்ன மாதிரியும் தங்களுக்கு பெண் கேட்ட மாதிரியும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ள இந்த இளைஞர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications