ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சர்ப்ரைஸ்! நாளை பகல் கோவில் நடை திறந்திருக்கும்: ராமநாதபுரம் குஷி
ராமநாதபுரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு, புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.. அந்தவகையில், நாளை 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள்.. எனவே, இதற்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராமேஸ்வரம் கோயில் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

அப்போது, தங்களது தலைமுறைகளை சூட்சுமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கனிவோடு பார்த்து, அந்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்வார்கள். எனவே மிக நல்ல நாளாகவே இந்த அமாவாசை பார்க்கப்படுகிறது.
அமாவாசைகளில் தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது.. அந்தவகையில் நாளைய தினம் ஆடி அமாவாசை வருகிறது.. அதிகாலை 3.06 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் 1.48 மணி வரை அமாவாசை நீடிக்கிறது. எனவே சூரிய உதயத்திற்கு பிறகு காலை 7 மணி முதல் மதியம் 12 மணிக்கு உட்பட்டு தர்ப்பணம் தந்துவிட வேண்டும்.
மேலும், மதியம் 12 மணி முதல் 1.20 மணிக்குள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலிட வேண்டும்..
ராமேஸ்வரம் கோயில் அறிவிப்பு
நதிகள், கடல், புனித தீர்த்தங்கள், புண்ணிய தலங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவெண்காடு, திருவாரூர், பவானி கூடுதுறை போன்ற திருத்தலங்களில் தை அமாவாசை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் நீர் நிலைக்குச் சென்று பித்ரு கடனை செய்யலாம்.
இதில் ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.. அந்தவகையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் குறித்த முக்கிய தகவல் ஒன்றினை கோவில் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது.
நடை திறக்கப்படுகிறது
இந்த கோயிலில், ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரும்நிலையில், விழாவின் 6-வது நாளான நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பிறகு மறுபடியும் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். ஆனால், நாளைய தினம், அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும்.
நிறைவு நாள் - கோயில் நிர்வாகம்
ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளில் அதாவது வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
இதனிடையே இன்று புதன்கிழமை, சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேசுவரத்திற்கும், நாளை 24-ந்தேதி ராமேசுவரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. .
www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கேட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications