‛‛எனக்கும் ரூ.1000 கிடைக்கவில்லை’’.. ஸ்டாலினை விமர்சித்த நடிகர் கஞ்சா கருப்பு! அதிமுகவுக்கு பிரசாரம்
ராமநாதபுரம்: ‛‛நானும் ரூ.1000 உரிமைத்தொகையை பெறவில்லை. முதல்வர் ஸ்டாலின் பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஸ்டாலின் கொடுப்பாரு. ஏழைகளுக்கு கொடுக்க மாட்டார்’’ என ராமநாதபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து நடிகர் கஞ்சா கருப்பு விமர்சனம் செய்துள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் சிட்டிங் எம்பி நவாஸ் கனி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பல் ஜெயபெருமாள், நாம் தமிழர் சார்பில் சந்திரபாபு களமிறங்கி உள்ளனர்.

பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நேற்று அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து நடிகர் கஞ்சா கருப்பு தீவிர பிரசாரம் செய்தார். அப்போது ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்தார். மேலும் மகளிர் உரிமைத்தொகையை அவருடைய குடும்பத்துக்கும் கிடைக்கவில்லை என தெரிவித்தார். இதுதொடர்பாக நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது:
‛என்ன தம்பி துபாய் ரிட்டர்னா’.. கோட் சூட்டில் வந்தவரை கலாய்த்த ஓபிஎஸ்! கடைசி வார்த்தை தான் முக்கியம்
நான் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறேன். இதுவரை நீங்கள் ஓட்டுப்போட்டீர்களே. ரூ.1000 பணம் தருவதாக சொன்னார்களே அதனை வாங்கி உள்ளீர்களா? என கேள்வி கேட்டார். அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் ‛‛வாங்கவில்லை’’ எனக்கூறினர். இதை கேட்ட கஞ்சா கருப்பு, ‛‛நானும் வாங்கவில்லை. ஏன் தெரியுமா? பணக்காரர்களுக்கு மட்டும் தான் ஸ்டாலின் கொடுப்பாரு. ஏழைகளுக்கு கொடுக்க மாட்டார். ஆனால் ஜெயலலிதா ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு பணம் வழங்கி உள்ளார்.
தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். பிளஸ் 2 முடித்த பெண்களுக்கு திருமணத்துக்கு ரூ.40 ஆயிரம் வழங்கி து ஜெயலிதா மட்டும் தான். மேலும் பெண்கள் திருமணம் முடித்தால் ரூ.20 ஆயிரம் பணம் வழங்கி பால் டப்பா முதல் பவுடர் படப்பா வரை தொட்டில் குழந்தை திட்டத்தில் வழங்கியது ஜெயலலிதா தான். எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பாக உருகாத வெல்லத்தோடு 21 சாமான்கள் வழங்கினார். மேலும் ரூ.2,500 பணம் வழங்கினார். அதுமட்டுமா கரும்பு, அரிசி, பரிசு வழங்கினார்.
‛‛அரசியலுக்கும் நானும் கூட வரலாம்’’.. போட்டுடைத்த விஜய் ஆண்டனி! ஸ்டாலின், திருமா, விஜய்க்கு ஆதரவு
இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் எம்பியாக உள்ள நவாஸ் கனி இதுவரை மக்களை வந்து பார்த்தாரா? பார்க்கவில்லை. இப்போது தேர்தல் வந்துள்ளதால் மக்களை பார்க்க வந்து கொண்டிருக்கிறார். உங்களை பார்க்க வருவார். அப்போது அவரை திருப்பி அனுப்பிவிடுங்கள். ஆனால் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி வழியில் வந்தவர். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என்றார்.












Click it and Unblock the Notifications