ராமர் பாலம் நோக்கி.. தனுஷ்கோடி கடலில் நீந்திய அமெரிக்கர்.. கடலோர போலீசார் பிடித்து தீவிர விசாரணை
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இந்துக்களின் மிகவும் முக்கியமான புனித தலம் ஆகும். வடமாநிலத்தில் காசி என்றால், தென்மாநிலத்தில் ராமேஸ்வரம் புகழ் பெற்ற ஆன்மீக தலமாக இருக்கிறது. ராமேஸ்வரம் மட்டுமின்றி அருகில் உள்ள தனுஷ்கோடியும் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இந்த பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த லுசிபர் என்ற சுற்றுலா பயணி வந்துள்ளார். அவர் ராமர் பாலம் இருக்கும் இடத்துக்கு செல்வதாக தனுஷ்கோடி கடலில் நீந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் இரண்டு முக்கியமான இடங்கள் ராமேஸ்வரம் மற்றும் வாரணாசி.. வாரணாசி என்பது வடமாநிலத்திலும், ராமேஸ்வரம் தென்மாநிலத்திலும் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி என்ற காசிக்கு ஏராளமான தென்மாநில பக்தர்கள் நாள்தோறும் சுற்றுப்பயணம் சென்று வருகிறார்கள்.

அதேபோல் வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கிறார்கள். சீதையை மீட்க இலங்கை செல்ல ராமேஸ்வரம் வழியாக ராமர் வந்து சென்றதாக நம்பப்படுகிறது. மேலும் ராமர் பாலம் இலங்கைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் ராம பக்தர்கள் பலர் தினமும் ராமேஸ்வரம் வந்து செல்கிறார்கள்
அமெரிக்காவை சேர்ந்த 40 வயதாகும் லுசிபர் என்ற சுற்றுலா பயணி நேற்று தனுஷ்கோடி வந்திருந்தார். அவர் திடீரென கடலில் இறங்கி அதன் நடுவே உள்ள மணல் திட்டுகளை நோக்கி நீந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மீனவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர் இதையடுத்து தகவல் அறிந்து வந்த கடலோர போலீசார், அவரை மடக்கிப்பிடித்தார்கள். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், லுசிபர் ஆன்மிக பயணமாக உத்தரபிரதேச மாநிலம் கும்பமேளாவுக்கு வந்துள்ளார். பின்னர் ராமேஸ்வரம் வந்தார். பின்னர் தனுஷ்கோடிக்கு வந்து கடலில் நீந்தியிருக்கிறார். தனுஷ்கோடி கடலில் ராமர் பாலம் இருக்கும் இடத்துக்கு செல்ல விரும்பியதால் இவ்வாறு நீந்தியதாக கூறப்படுகிறது.
போலீசார் லுசிபரிடம் தனுஷ்கோடி கடல் என்பது அதிக சீற்றம் கொண்ட ஆபத்தான பகுதி என்று கூறியதுடன், யாருக்கும் கடலில் இறங்கி நீந்த அனுமதி இல்லை என கூறினர். மேலும் லுசிபரின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் அவரை எச்சரித்து தனுஷ்கோடியில் இருந்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications