ராமேஸ்வரம் கடலுக்குள் இருந்து திடீரென வந்த விசித்திர தேர்.. பொதுமக்கள் ஆச்சரியம்.. என்ன பின்னணி?
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் இருந்து திடீரென்று கரை ஒதுங்கிய விசித்திர தேரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் அந்த தேர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகே கடலில் குளிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் ராமேஸ்வரம் ஓலைக்குடா கலங்கரை விளக்கம் அருகே கடலில் இருந்து விசித்திரமான தேர் ஒன்று புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய சம்பவம் நடந்துள்ளது.
அதாவது ராமேஸ்வரம் ஓலைக்குடா கலங்கரை விளக்கம் கடலில் தேர் வடிவிலான மர்மமான பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை அங்குள்ள மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் அது கரை ஒதுங்கியது. அப்போது அது மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட தேர் என்பது அதில் புத்தர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அந்த தேர் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர்.

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த தேரை பார்வையிட்டனர். அப்போது சுமார் 10 அடி உயரத்தில் மூங்கில்களை பயன்படுத்தி தேர் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த தேரில் இருந்த கொடி மற்றும் தேரில் வேற்று மொழியில் எழுதி வைக்கப்பட்டு இருந்த வாசகங்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் மியான்மர், தாய்லாந்து நாடுகளில் பொதுவாக கடல்வளம், மீன்வளர பெருக வேண்டி கடலில் தேர் விடுவது வழக்கமான ஒன்று என கூறப்படுகிறது. இதனால் இந்த தேரும் அந்த நாடுகளில் இருந்து கடலில் விட்டு இருக்கலாம். காற்றின் வேகத்தில் இந்த தேர் ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த தேர் என்பது எங்கிருந்து வந்தது? பின்னணி என்ன? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் உண்மையில் இந்த தேர் என்பது வழிபாடு முறையில் விடப்பட்டதா? இல்லையேல் கடத்தல்காரர்கள் இந்த யுக்தியை பயன்படுத்தி கடத்தலில் ஈடுபடுகின்றனரா? என்பதை கண்டறிய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏனென்றால் இப்படி ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதுபோன்ற தேர் கரை ஒதுங்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் உள்ளிட்ட சில இடங்களில் இதுபோன்ற தேர் கரை ஒதுங்கி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications