பாபநாசம் டைப் கிரைம்..மனநலம் இல்லா பெண்.. நண்பன் வீட்டில் ‘வேலை’ காட்டிய நம்பு.. குழிக்குள் ட்விஸ்ட்
ராமநாதம்: ராமநாதபுரத்தில் ஒரு மாதத்திற்கு முன் மாயமானவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது தெரிய வந்திருக்கிறது. மன நலம் பாதிக்கப்பட்ட தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் நண்பனே கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாபநாசம் படத்தில் வருவது போல கொலையை மறைக்க முயன்றவர் சிக்கிய பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்..
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் நம்புராஜன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி நண்பர்களை பார்ப்பதாக கூறி வெளியே சென்றார். அதற்குப் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.
இதை அடுத்து அவரது சகோதரி ராணி பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதை அடுத்து தனது அண்ணனை கண்டுபிடித்து தர வேண்டுமென ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய போலீசார் நம்பு ராஜனுடன் தொடர்பில் இருந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அப்படி நடத்தப்பட்ட விசாரணையில் நம்பு ராஜனுக்கும் ராமேஸ்வரம் வெண்மணி நகரை சேர்ந்த வெங்கட் சுப்பிரமணியன் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனியாக மது அருந்தி வந்ததும் போலீசார் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
மது குடிப்பதற்காகவே நம்பு ராஜன் வெங்கட் சுப்பிரமணியனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். இதை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வெங்கட சுப்பிரமணியத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. முதலில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பதில் அளித்த நிலையில் அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தனது நண்பனான நம்புபுராஜனை சுவற்றில் மோதி கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் உடலை புதைத்ததாக கூறி அதிர வைத்தார் வெங்கட் சுப்பிரமணியன் தொடர்ந்து நேற்று வெண்மணி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் கொலை நடைபெற்ற இடத்தையும் உடல் புதைக்கப்பட்ட இடத்தையும் கண்டுபிடித்தனர் தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது
கொலை தொடர்பாக விசாரித்த போது கடந்த மார்ச் 30ஆம் தேதி வழக்கம் போல் மது குடிப்பதற்காக வெங்கட் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் இல்லை என சொல்லப்படுகிறது. தொடர்ந்து வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை இருப்பதை கண்டு அவரிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். இது குறித்து அந்த பெண் தனது சகோதரனிடம் கூற ஆத்திரமடைந்த வெங்கட் சுப்பிரமணியன் நம்பு ராஜனை தாக்கியதோடு சுவற்றில் மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து உள்ளார். இதனால் பயந்து போன வெங்கட் சுப்பிரமணியன் உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறம் இருக்கும் காலி இடத்தில் குழி தோண்டி புதைத்து வைத்தது தெரிய வந்தது. இதை அடுத்து மாயமான வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications