ரூ.3 கோடியில் தேவர் பெயரில் திருமண மண்டபம் - பசும்பொன்னில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு
ராமநாதபுரம்: "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த இடமான பசும்பொன்னில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அவரது பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும்" என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வர் உடன் எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் 224வது குருபூஜை விழாவை ஒட்டி, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாட்டின் விடுதலைக்கு தன்னை ஒப்படைத்த தேவரின் நினைவிடத்தில் எங்கள் மரியாதையைச் செலுத்தியுள்ளோம்.
அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல் போன்று காட்சியளித்தவர் என அண்ணாவால் போற்றப்பட்டவர் முத்துராமலிங்கத் தேவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தை 1969 ஆம் ஆண்டு பார்வையிட்டு மணி மண்டபமாக உருவாக்கி கொடுத்தவர் தான் கலைஞர். 2007-ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா கலைஞர் ஆட்சியில் கொண்டாடப்பட்டது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக மாற்றியவர் கலைஞர்" என்று தெரிவித்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ரூ.3 கோடி செலவில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும் என பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications