ராமேஸ்வரம்: பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் 3 கி.மீ நடக்கும் பக்தர்கள்.. மோடி வருகை காரணமாக அவதி!
ராமநாதபுரம்: பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து கோயில் வரை செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். பக்தர்கள் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்து.
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டுப் போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி.

பின்னர், திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி. ராமேசுவரத்திற்குச் சென்றடைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். இன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.
ராமேஸ்வரம் வந்த மோடி: நாளை (ஜனவரி 21ஆம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன் பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். அதன் பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வருகையின் எதிரொலியாக ராமேஸ்வரத்தில் பக்தர்கள், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் எனவும், பிற்பகல் 12 மணி முதல் 21 ஆம் தேதி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கடும் அவதி: இன்று பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி முதல் நாளை பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை ஜனவரி 21ஆம் தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் இன்றும் நாளையும் இரு நாட்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதசுவாமி கோயில் வரை செல்லும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிகுள்ளாகியுள்ளனர். சுற்றுலா வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுமார் 3 கி.மீ தூரம் வரை பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications