நாத்தம் புடிச்ச சேர்மன் பதவி.. 2 கோடி கொடுத்து இங்க வந்தோம்.. திமுக நகராட்சி தலைவரின் தங்கை ஆவேசம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கமிஷன் பிரிப்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சேர்மனின் தங்கை, கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் திமுக கூட்டணிக்கு 12 கவுன்சிலர்கள், அதிமுகவுக்கு 1 கவுன்சிலர், எஸ்டிபிஐ கட்சிக்கு 1 கவுன்சிலர், சுயேட்சைகள் 7 பேர் என 21 கவுன்சிலர்கள் உள்ளனர். நகராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த சபானாஸ் ஆபிதா, துணைத் தலைவராக ஹமீது சுல்தான் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் 21 வார்டுகளுக்கும் தெரு விளக்குகள் பொருத்த ரூ.1.18 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, 3 சதவீத கமிஷன் நகராட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையை கவுன்சிலர்கள் யாருக்கும் பங்கு பிரித்து தர முடியாது என நகராட்சி தலைவரின் தங்கை ஹமீதா, நகராட்சி தலைவர் சபானாஸ் ஆபிதா, அவரது சகோதரர் இஸ்திகா ஹசன் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற அலுவலகத்தில் கவுன்சிலர்களிடம் ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் பெரும் தொகை செலவழித்து சேர்மன் பதவிக்கு வந்திருப்பதாகவும், இதனால் யாருக்கும் பணத்தை பிரித்துக் கொடுக்க முடியாது எனவும், சொத்துகளை விற்று 2 கோடி ரூபாய் கொடுத்துத்தான் சீட்டு வாங்கினோம். ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை பணம் கொடுத்து சேர்மன் ஆனோம் என ஆவேசமாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நாத்தம் பிடிச்ச இந்த சேர்மன் பதவிக்கு இவ்வளவு செலவழித்து, உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். பிச்சைக்காரர்களாக நிற்கிறோம். நாங்கள் எதற்கு காசை பிரித்து கொடுக்க வேண்டும். யாருக்கு வேண்டும் இந்த நாத்த அரசியல்? தலைமுறை தலைமுறையாக உட்கார்ந்து சாப்பிட சொத்து இருக்கு. இந்த ஆயிரத்துக்கும், ஐநூறுக்கும் இங்கு பங்கு போட வேண்டுமா? என அவர் ஆவேசமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ பரவி வருகிறது.
திமுக நகராட்சி சேர்மன் சபானாஸ் ஆபிதாவின் சகோதரர் இஸ்திகா ஹசன், ராமநாதபுரம் மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்துத்தான் சேர்மன் ஆனதாக அவரது தங்கை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications