பரமக்குடி வனிதா ஞாபகமிருக்கா? ஸ்டாலின் முதல்வராகணும்னு "நாக்கு" அறுத்துக்கிட்டாரே.. பாருங்க கொடுமையை
ராமநாதபுரம்: பரமக்குடி வனிதாவை ஞாபகம் இருக்கா? இப்போது வனிதாவின் குடும்பத்தில் நடந்த சம்பவம், ஒட்டுமொத்த ராமநாதபுர மக்களையும் அதிரச்செய்து வருகிறது,
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது பொதுவக்குடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் குருவம்மாள்.. இவரது மகள் வனிதாவிற்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்து, 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

கார்த்திக்: ஆனால், கருத்து வேறுபாடு காணரமாக வனிதாவை பிரிந்து சென்றுவிட்டார் கார்த்திக்.. இதனால், வனிதா இன்னொருவரை கல்யாணம் செய்து கொண்டு, வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.. தன்னுடைய 2 பிள்ளைகளையும், அம்மா குருவம்மாளிடம் விட்டு சென்றுள்ளார்.. குருவம்மாளும் பேரக்குழந்தைகளை வளர்த்து வந்திருக்கிறார்.
அங்கிருக்கும் தென்னந்தோப்பிலேயே குருவம்மாள் வேலை பார்த்து வருகிறார்.. இதனால், தென்னந்தோப்பிலேயே உள்ள வீட்டில் குருவம்மாள் தங்கியிருந்து குழந்தைகளை வளர்த்து வருகிறார். குருவம்மாளுடன் இதே தென்னந்தோப்பில் பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம்.. இவருக்கு வனிதா 2வது திருமணம் செய்து கொண்டு வெளிநாடு சென்ற விஷயம் தெரியாது.
வனிதா: எனவே, வனிதாவை தனக்கு 2வது கல்யாணம் செய்து தருமாறு குருவம்மாளிடம் கேட்டு வந்துள்ளார்.. சம்பவத்தன்றுகூட, தென்னந்தோப்பில் வனிதாவை கல்யாணம் செய்து தருமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். அப்போதுதான், வனிதாவுக்கு இன்னொரு கல்யாணம் ஆகிவிட்ட விஷயத்தையே குருவம்மாள் சொன்னார் இதைக்கேட்டதும் ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்ததுடன், ஆத்திரமும் அதிகமாகிவிட்டது.
இதனால், தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குருவம்மாள் பேரன், பேத்திகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, 3 பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து கொளுத்திவிட்டார் ஆறுமுகம்.. இதில் குருவம்மாளும், அவரது 12 வயது பேத்தியும் கருகி இறந்துவிட்டார்கள்.. 15 வயது பேரனுக்கு உடம்பெல்லாம் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.. தற்போது அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆத்திரம்: வனிதாவுக்கு திருமணம் ஆன அதிர்ச்சியை தாங்க முடியாமல், 3 பேரை எரித்தும்கூட, ஆறுமுகம் ஆத்திரம் அடங்கவில்லை.. ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாத ஆறுமுகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி அருகே ஊரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.. 50 வயதாகிறது.. குருவம்மாளுக்கு 52 வயதாகிறது.. முதல் கணவனுடன் விவாகரத்து பெற்றுவிட்ட வனிதாவுக்கு, கடந்த மாதம்தான் வேறொருவருடன் திருமணம் நடந்துள்ளது.. கல்யாணம் ஆன கையோடு வெளிநாட்டுக்கும் சென்றுவிட்டதால், ஆறுமுகத்துக்கு இந்த விஷயம் தெரியவில்லை.. 3 பேரையும் எதிர்த்த ஆறுமுகம், அதே தென்னந்தோப்பிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்..
ஆறுமுகம்: ஆறுமுகம் ஆசைப்பட்ட, இந்த பரமக்குடி வனிதா யார் தெரியுமா? வனிதாவுக்கு ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கிறது. கிட்டத்தட்ட 10 வருடம் ஆட்சியை இழந்த திமுக, மீண்டும் போராடி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பெற்றது.. இதனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஏக மகிழ்ச்சியில் திளைத்தனர்..
அந்தவகையில், திமுகவின் தீவிரமான திமுக தொண்டரான, பரமக்குடி பொதுவக்குடியை சேர்ந்த கார்த்திக்குக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.. இந்த கார்த்திக்கின் மனைவிதான் வனிதா.
ஸ்டாலின்: ஸ்டாலின் முதல்வராக வர வேண்டுமென அங்குள்ள முத்தாலம்மன் கோயிலில் ஏற்கனவே வேண்டி கொண்டுள்ளார். ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டால், தன்னுடைய நாக்கை அறுத்து கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவதாகவும் அப்போது வேண்டியிருந்தார்.. அதன்படியே, முத்தாலம்மன் கோயிலுக்கு சென்ற வனிதா, தன்னுடைய நாக்கை அறுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
நாக்கை அறுத்ததுமே வனிதாவுக்கு ரத்தம் பொலபொலவென கொட்டியது.. இதையடுத்து, அவர் உடனடியாக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்... தீவிரமான சிகிச்சைக்கு பிறகு வனிதா குணமானார்.. நேர்த்தி கடனுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பரமக்குடியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.
விவாதங்கள்: இந்த விவகாரம் சில விவாதங்களையும் அப்போது சோஷியல் மீடியாவில் எழுப்பியிருந்தது.. கடவுள் மறுப்பு பேசும் கட்சியிலேயே இப்படி நடக்கிறதே என்ற விமர்சனமும் எழுந்தது.. ஆனால், திமுகவின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்பது தான் என்றும், திமுகவின் கொள்கைக்கும், ஒருவரின் தனிப்பட்ட வேண்டுதல்களுக்கும் சம்பந்தமே கிடையாது, இது அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்த விஷயம் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.. வனிதா தனக்காக நாக்கை வெட்டிக் கொண்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஸ்டாலின், ஒரு அறிக்கையே வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், வனிதாவுக்காக தன் வருத்தத்தை தெரிவித்து கொண்டிருந்த ஸ்டாலின், இனிமேல் இதுபோன்ற துயரங்களை ஏற்படுத்தாமல், ஏழை - எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை காணிக்கையாக செலுத்துங்கள் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தார்.
வருத்தம்: "சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும்" என்று முதல்வர் அப்போது வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.
அந்த வனிதாவுக்காகத்தான் இன்று 3 உயிர்கள் பரலோகம் போயிருக்கின்றன... வனிதா மகன் குருவுக்கு இப்போது சீரியஸாக இருக்கிறதாம்.. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.. தீ வைத்து கொன்றதற்காக ஆறுமுகத்தை போலீசார் தேடி வந்திருக்கிறார்கள்.. அப்போதுதான், போலீசுக்கு பயந்து, பூச்சி மருந்தை குடித்து ஆறுமுகம் தறகொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது... இந்த சம்பவத்தினால் ராமநாதபுரமே அதிர்ச்சியில் உள்ளது!!!
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications