ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வெல்வாரா?அனுதாப அலையால் அதிமுகவுக்கு ஷாக்.. தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக ஓ பன்னீர் செல்வம் களமிறங்கி உள்ளார். இவர் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான சிட்டிங் எம்பி நவாஸ் கனி, அதிமுகவின் ஜெயபெருமாள் ஆகியோரை எதிர்க்கிறார். இந்நிலையில் தான் தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் யார் வெல்வார்கள்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இந்த ரிசல்ட் அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி சார்பில் இந்த கருத்து கணிப்பு என்பது மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி ராமநாதபுரம் தொகுதியில் வெல்வது யார்? என்பது பற்றி ரிசல்ட் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் தொகதியில் சிட்டிங் எம்பியாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி உள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறையும் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக நவாஸ் கனியே களமிறங்கி உள்ளார். அதேபோல் அதிமுக சார்பில் ஜெயபெருமாள் என்பவரும், நாம் தமிழர் சார்பில் சந்திரபிரபா என்பவரும் போட்டியிடுகின்றனர்.
மேலும் பாஜக கூட்டணியில் இந்த தொகுதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் போட்டியிட்டுள்ளது. அவருக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் ஓ பன்னீர் செல்வத்தின் பெயரில் மேலும் 5 ஓபிஎஸ்கள் சுயேச்சையாக களமிறங்கி உள்ளனர். இதனால் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ராமநாதபுரம் தொகுதி தொடர்பாக தந்தி டிவி மேற்கொண்ட கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் 2வது இடம் தான் பிடிப்பார் என தெரிவிக்கப்பட்ள்ளது. அதாவது இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெறுவார் எனவும், அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நவாஸ் கனி 34 முதல் 40 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக முன்னாள் முதல்வரும், பாஜக கூட்டணி வேட்பாளருமான ஓ பன்னீர் செல்வம் 30 முதல் 36 சதவீத ஓட்டுகளை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக வேட்பாளர் 20 ச முதல் 26 சதவீத ஓட்டுகளையம், நாம் தமிழர் வேட்பாளர் 6 முதல் 9 சதவீத ஓட்டுகளையும், மற்றவர்கள் 1 முதல் 3 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொகுதியை பொறுத்தமட்டில் ஓ பன்னீர் செல்வம் மீது அனுதாபம் உள்ளது. இது அவருக்கு பாசிட்டிவ்வாக உள்ளது. இருப்பினும் அவர் சுயேச்சை சின்னமான பலாப்பழத்தில் போட்டியிடுவது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அவரது சின்னம் பின்தங்கி இருப்பது, ஓ பன்னீர் செல்வத்துக்கு போட்டியாக மேலும் 5 ஓபிஎஸ்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை நெகட்டிவ்வாக உள்ளது.
மேலும் ஓ பன்னீர் செல்வம் தான் சார்ந்த குறிப்பிட்ட சமுதாயம் மீது அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் பிற சமுதாயத்தினரின் ஓட்டு என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications