Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க.. ஓபிஎஸ் பேச்சால் அதிர்ந்த தொண்டர்கள்.. உடனே கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இன்று ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஓ பன்னீர் செல்வம் இரட்டை இலைக்கு ஓட்டு போட சொன்னதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாஜக கூட்டணியில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டதால் தற்போது பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வரும் 19 ஆம் தேதி தேர்தல் என்பதால் கொதிக்கும் வெயிலுக்கு இடையே பிரசாரமும் தீயாய் நடைபெற்று வருகிறது.

Former CM O Pannerselvam mistakenly seeking vote for Two leave symbols in his Campaign

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் தங்களது தலைமையில் தனித்தனியே கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல், நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். தனது செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக சுயேச்சை சின்னத்தில் களமிறங்க முடிவு செய்தார்.

தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர் செல்வத்திற்குக்கு குலுக்கல் முறையில் பலாப்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ஓட்டு கேட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேன் பிரசாரம் மூலம் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில், இன்று ராமநாதபுரம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஓ பன்னீர் செல்வம், திடீரென இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதால் தொண்டர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தனர். ஒ பன்னீர் செல்வம் பேசுகையில், "இங்கே இருக்கும் தாய்மார்களே.. உங்களது பொன்னான வாக்குகளை.. நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்துக்கு... என்று கூறிவிட்டார். இதனால் ஒரு நொடி தொண்டர்கள் ஷாக் ஆகினர்.

எனினும், அடுத்த நொடியே உஷாரான ஓபிஎஸ், பலாப்பழ சின்னத்தில் ஓட்டு போடுங்கள்.. பழக்க தோசத்தில் இப்படி வந்துவிட்டது என்று சிரித்தபடி கூறினார். உடனே சுற்றியிருந்த தொண்டர்கள் பலாப்பழம் சின்னம்.. பலாப்பழம் சின்னம் என்று கூறினர். இதையடுத்து, உற்சாகமான ஓபிஎஸ் தொடர்ந்து பேசினார்.

ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, பிரசாரத்தின் போதும் இரட்டை இலை சின்னத்திற்கே இதுவரை நடைபெற்ற தேர்தலில் வாக்கு கேட்டு பேசியுள்ளார். இதனால் இன்று நடந்த பிரசாரத்திலும் தனது சின்னமான பலாப்பழைத்தை மறந்து இரட்டை இலை என வாய் தவறி சொல்லிவிட்டார்.

ராமநாதபுரத்தில் ஓ பன்னீர் செல்வத்திற்கு எதிராக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுகிறது. இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இது தவிர ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர் செல்வம் பெயரிலேயே 5 பேர் போட்டியிடுகிறார்கள்.

முன்னதாக, இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தை நாடியிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டது. இரட்டை இலை அதிமுகவின் சின்னமாக இருக்கும் நிலையில் அந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட உள்ளதால் இரட்டை இலை ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படவில்லை.

மேலும் கட்சிக்குள் உள்ள பிரச்சனை மற்றும் வழக்குகளை சுட்டிக்காட்டி அவர் தரப்பில் இரட்டை இலையை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் ஆகியவற்றில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய கோரியிருந்த நிலையில், ஓ பன்னீர் செல்வம் என்ற பெயரில் உள்ள வேட்பாளர்களும் இதே சின்னத்தை கேட்டதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் தான் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழம் சின்னமும், உசிலம்பட்டியை சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு கரும்பு விவசாயி சின்னமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+