பரமகுடியில் பதம் பார்த்த கூகுள் மேப்.. ராமநாதபுர போலீஸை பார்த்தீங்களா? கண்மாயில் கவிழ்த்த டெக்னாலஜி
ராமநாதபுரம்: கூகுள் மேப் உதவியுடன் பயணம் மேற்கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பயம் சிலசமயங்களில் பயணிகளுக்கு வந்துவிடுகிறது. பசும்பொன்னில் குருபூஜை, ஜெயந்தி விழா பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசாருக்கு என்ன நடந்தது?
வெளியூருக்கு எங்காவது செல்ல நேர்ந்தால், வழியில் தென்படுபவர்களிடம் வழி கேட்டு எப்படியோ போய் சேர்ந்து விடுவோம். ஆனால், தற்போது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு, எந்த உதவியாக இருந்தாலும் அதனை இயந்திரங்களின் உதவியை கொண்டே செய்ய துவங்கிவிடுகிறோம்.. அந்தவகையில், கூகுள் மேப் பெரிதும் உதவி வருகிறது.
இயந்திரங்கள்: ஆனால், இயந்திரங்கள் என்று சொன்னாலே, தொழில்நுட்ப கோளாறு என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது... எலக்ட்ரானிக் சாதனங்கள் என்பதால், இதுபோன்ற கோளாறுகள் வருவது இயல்புதான்.. கூகுள் மேப்பால் இப்படி பல அவஸ்தைகள் நடப்பதுடன், சிலசமயம் உயிருக்கு ஆபத்தாகும் நிலைமை வரை சென்றுவிடுகிறது.

ஒருமுறை கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிச் சென்றபோது, ரோடு என்று நினைத்து ஆற்றில் காரை விட்டதால் நீரில் மூழ்கி 2 டாக்டர்கள் உயிரிழந்தனர். அதாவது, பறவூரில் இருந்து கொடுங்கநல்லூருக்கு காரில் கூகுள் மேப் உதவியுடன் 5 பேர் சென்றிருக்கிறார்கள்..
ஆற்று நீர்: எர்ணாகுளம் அருகே நள்ளிரவில் வந்தபோது சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது என நினைத்து ஆற்றிற்குள் காரை ஓட்டிவிட்டார்கள்.. இதில் கார் ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது.. 5 பேருமே நீரில் மூழ்கி போராடினார்கள்.. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து பதறி தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தனர். காரில் பின் சீட்டிலிருந்த 3 பேருமே உயிர்தப்பி விட்டார்கள்.. ஆனால், முன்சீட்டில் உட்கார்ந்திருந்த அத்வைக், அஜ்மல் என்ற 2 டாக்டர்களுமே கார் கதவை திறக்க முடியாமல் தண்ணீரிலேயே மூழ்கி இறந்துவிட்டார்கள்.
சமீபத்தில்கூட, இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூகுள் மேப் பார்த்து வழிமாறி, பாறையில் இருந்து தவறி குழிக்குள் விழுந்துவிட்டனர்..
ராமநாதபுரம்: இதோ இப்போது பரமக்குடியிலும் ஒரு விபத்து நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழா 3 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மாநிலம் முழுவதுலிருந்து போலீசார் வந்திருக்கிறார்கள்..

கோவையைச் சேர்ந்த 30 போலீசார் ஒரு வேனில் ராமநாதபுரம் வந்தனர். அங்கிருந்து அவர்கள் கமுதிக்கு புறப்பட்டனர்.. நேற்றுமுன்தினம் அதிகாலை 2 மணிக்கு சத்திரக்குடி அருகே கீழகோட்டை வழியாக கீழம்பல் நோக்கி சென்றிருக்கிறார்கள்.. அப்போது டிரைவர் கூகுள் மேப் உதவியுடன் வேனை ஓட்டியிருக்கிறார்.. ஆனால், அங்கு கண்மாய் இருப்பது தெரியாமல், நிலை தடுமாறி வேன் கண்மாயில் கவிழ்ந்துள்ளது.. இதில் 20 போலீசார்கள் படுகாயமடைந்துள்ளனர்..
கண்மாய்: கண்மாயிலிருந்து எளிதில் அவர்களால் மீண்டுவர முடியாமல் போராடி இருக்கிறார்கள்.. அதற்கு பிறகு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கண்மாயில் விழுந்த போலீசார் மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
பிறகு, காயமடைந்தவர்கள் பரமக்குடி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணையை சத்திரக்குடி போலீசார் மேற்கொண்டுள்ளனர் என்றாலும், கூகுள் மேப் உதவியுடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள் கண்மாயில் விழுந்தது அதிர்ச்சியை தந்து வருகிறது.. எப்பேர்ப்பட்ட டெக்னாலஜியும், சிலசமயம் மனிதர்களை சோதித்துவிடுகிறது..!!












Click it and Unblock the Notifications