கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன்.. எனக்கு பயமில்லை.. ஸ்டாலின் அதிரடி!
கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன், எனக்கு பயமில்லை, கோர்ட்டுக்கு செல்ல தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
சென்னை: கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன், எனக்கு பயமில்லை, கோர்ட்டுக்கு செல்ல தயார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
மக்களவைத் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதேபோல் பரமக்குடி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சம்பத் குமாரை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
இதில் கொடநாடு கொலைகள் குறித்தும், முதல்வர் குறித்தும் ஸ்டாலின் பேசினார். சென்னை ஹைகோர்ட் கொடநாடு கொலை குறித்து பேச கூடாது என்று கூறி இருந்த போதிலும் அவர் இதுகுறித்து பேசினார்.

என்ன பேசினார்
ஸ்டாலின் தனது பேச்சில், திமுக ஆட்சியில் இருந்த போது தான் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.617 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டது. அதன் பல மக்கள் பலன் அடைந்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த சாதனையும் நிகழ்த்தப்படவில்லை

எப்படி ஆட்சி
இனி பொற்கால ஆட்சி அமைப்போம் என்று அதிமுக கூறுகிறது. இதுவரை பொற்கால ஆட்சி அளிக்கவில்லை என அதிமுகவே ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட கொடூரங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன.

அரசு அமைதி
ஆனால் அரசு அமைதியாக இருக்கிறது. 7 ஆண்டாக பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நடப்பது காவல்துறைக்கு தெரியவில்லையா? பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பயமில்லை
சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளதாக எடப்பாடி கூற தகுதியில்லை. கொடநாடு கொலைக்கு எதிராக பேச கூடாது என்று நீதிமன்றம் சொல்கிறது. ஆனால் நான் கொடநாடு கொலைகள் பற்றி பேசுவதை நிறுத்தமாட்டேன். கோர்ட்டுக்கு செல்ல தயார்: எனக்கு பயமில்லை.

மோடி எப்படி
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முதல்வர் எடப்பாடிக்குத்தான் பிரதமர் மோடி காவலாளி. தமிழக மீனவர்களுக்கு பிரதமர் மோடி எப்போதுமே காவலாளியாக இல்லை. தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்துக்கு வரும் போது பிரதமர் மோடி, தமது கேள்விகளுக்கு பதில் தர வேண்டும், என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்!












Click it and Unblock the Notifications