ஊரெல்லாம் மநீமவுக்கு ஆறுதல்.. சொந்த ஊரில் ஆண்டவருக்கு வந்த சோதனை.. பரமக்குடியில் 4வது இடம்!
பரமக்குடியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கமலின் மக்கள் நீதி மய்யம்
Recommended Video
பரமக்குடி: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தேர்தலில் தனித்து போட்டி என்றவுடன் கமல் எப்படியோ களத்தில் இறங்க போகிறார் என்ற தகவல் வேகமாக பரவியது. அதனால் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற ஆர்வத்தையும் கூட்டியது.
ஒரு கட்டத்தில் அவரின் சொந்த ஊரான பரமக்குடி, ராமநாதபுரத்தில் உள்ளதால் அவர் அங்கு போட்டியிட விரும்புவதாகவும் தகவல் வெளியானது. ஏனென்றால், அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவும், திமுக கூட்டணி கட்சியான இந்திய முஸ்லீம் கட்சியும் ராமநாதபுரத்தில் போட்டியிட உள்ளதால் அது மக்கள் நீதி மய்யத்திற்கு சாதகமான தொகுதியாக பார்க்கப்பட்டது.

இலவச குடிநீர்
வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும்வரை கமல் இது பற்றி வாயே திறக்கவில்லை. ஆனாலும், அவரது கட்சியினர் முன்கூட்டியே தொகுதி பிரச்சனையில் ஆழமாக இறங்கி தூர் வார ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக குடிநீர் பிரச்சனையை கையிலெடுத்து தொகுதி முழுக்க 6 மாசமாக இலவசமாக குடி நீர் விநியோகம் செய்து வந்தனர் மய்ய உறுப்பினர்கள்.

குற்றச்சாட்டு
ஆனால் எம்பி மற்றும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிப்பில் கமல் பெயர் அறிவிக்கப்படவில்லை. மாறாக, அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களும் தொகுதி பக்கம் சில நாட்களுக்கு எட்டி பார்க்கவில்லை என்றே குற்றஞ்சாட்டப்பட்டது.

எஞ்சிய வாழ்க்கை
ஏப்ரல் 13-ம் தேதி கமல் பிரச்சாரத்துக்கு சென்றார். அப்போது பேசியபோது, "சிறந்த மனிதனாகத் தமிழகத்துக்கான கடமையைச் செய்து முடித்துவிட்டுத்தான் செத்தான் என்பதுதான் எனக்கு வேண்டும். என்னுடைய எஞ்சிய வாழ்க்கை மக்களுக்குத்தான்" என்று உருக்கமாக பேசினார்.

பரமக்குடி
ஆனால் மற்ற தொகுதிகளுக்கு கமல் எப்படி பிரச்சாரம் செய்தாரோ, அதுபோலவேதான் பரமக்குடிக்கும்! எந்த ஸ்பெஷல் சிரத்தையும் சொந்த ஊர் என்பதால் எடுத்து கொள்ளவில்லை. இங்குதான் சிக்கலே. கமல் இந்த இடத்தில்தான் தவறு செய்துவிட்டார். இங்கு அவர் போட்டியிட்டு இருக்க வேண்டும் என்பதே சரி.

4-வது இடம்
இன்றைய வாக்கு எண்ணிக்கையில், பரமக்குடியில் அதிமுக முதலிடத்திலும், திமுக இரண்டாம் இடத்திலும் உள்ளது. மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது. நான்காவது இடத்தைதான் மக்கள் நீதி மய்யம் பிடித்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

போட்டியிடாத கமல்
தன் கட்சியின் பலத்தை சீர்தூக்கி பார்ப்பதற்காக கமல் தனித்து போட்டி என்பதைகூட ஒரு விதத்தில் ஏற்கலாம். ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் கமல் போட்டியிட்டால், அதற்கு யார் மறுப்பு சொல்லி இருக்க போகிறார்கள். பரமக்குடி தொகுதியில் கமல் போட்டியிட்டு இருந்தால், குறைந்தது 2-வது அல்லது 3-வது இடத்தையாவது பிடித்திருப்பார் என்றே தோன்றுகிறது.

அதிக நம்பிக்கை
தமிழகத்துக்கு சின்ன குழந்தையிலேயே அறிமுகமான கமலுக்கு என்று தனியாக பிரச்சாரம் தேவை இல்லை. அதேபோல, அந்த ஊர் மக்களும் எப்படியோ போட்டியிடுவார் என்றே நம்பினார்கள். சொந்த ஊர் மக்களின் நம்பிக்கையையும் பாழாக்கி, இப்படி 4-வது இடத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது கமலாக தேடி கொண்டதுதான், வேறு யாரும் காரணம் இல்லை!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications