Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவை மிஞ்சும் "சேஸிங்".. குவிந்த "கேங்ஸ்டர்கள்".. ராமநாதபுரத்தில் நடந்த பரபர சம்பவம்.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல் அட்டைகளை கடத்தி சென்றவர்களை கடலோர காவல்துறையினர் துரத்திப்பிடித்த காட்சிகள் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கடலோர காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

சமீப காலங்களாக இப்பகுதிகளில் கடல் அட்டைகள் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதால் அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

சோதனை

சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் வழக்கம்போல கடலோரக் காவல் படையினர் சோதனை சாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சரக்கு வேன் ஒன்றில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சோதனையின்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை இதனை மறித்து சோதனையிட காவலர்கள் முயன்றுள்ளனர்.

ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள்

ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள்

ஆனால் வேன் நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து கடலோர காவல்துறையின் உதவி காவல் ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் காவலர்கள் துரத்தி சென்றுள்ளனர். சினிமாவில் வருவதைப்போல இந்த துரத்தல் காட்சிகள் இருந்ததாக இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதில் ஒருவழியாக அந்த வேனை காவல்துறையினர் பிடித்துவிட்டனர். அதில் சோதனை நடத்தியதில் 40 மூட்டைகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 காவலர்கள் மீது தாக்குதல்

காவலர்கள் மீது தாக்குதல்

ஆனால் இதற்கடுத்துதான் முக்கிய சம்பவமே நடந்துள்ளது. அதாவது, இந்த சம்பவம் தீயாய் பரவியதையடுத்து சம்பவ இடத்தில் சுமார் 80 பேர் கூட்டமாக கூடினர். காவல்துறையினர் இவர்களை எச்சரித்துள்ளனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அந்த கும்பல் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் காவல்துறையினரின் வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலில் காவலர்கள் காயமடைந்தனர்.

புகார்

புகார்

பின்னர் அந்த கும்பல் கடல் அட்டைகள் கொண்ட வேனை பத்திரமாக ஓட்டிச் சென்றுவிட்டது. கூடியிருந்த கும்பலும் கலைந்து சென்றுவிட்டது. காவலர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவம் கேள்விப்பட்ட கூடுதல் காவலர்கள் விரைந்து காயமடைந்திருந்த காவலர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடலோரக் காவல்துறையினர் மண்டபம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தேடுதல்

தேடுதல்

இந்த புகாரையடுத்து வேதாளையை சேர்ந்த செய்யது காசிம் மரைக்காயர், ரியாஸ் அகமது, ஹமீது ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய 80 பேர் கொண்ட கும்பலையும், கடல் அட்டைகள் கொண்ட வாகனம், அதனை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் என அனைவரையும் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+