ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்காக பதறும் ஜவாஹிருல்லா! தமிழக அரசு இதை மட்டும் செய்யக்கூடாது!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வசம் இருப்பினும் கூட அம்மாவட்டத்திற்காக முதல் குரல் கொடுத்து தனது பழைய பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா. 2011-2016 காலக்கட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜவாஹிருல்லா.

இதனிடையே ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;
'' தமிழகத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கும் காவிரி படுகை என்பது ராமநாதபுரம் மாவட்டம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் அடிப்படையில் மூன்றாவது சுற்றுத்திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி. சி. நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுரகிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றிருந்தது.
தற்போது அப்பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைஅமைக்கத் திட்டமிட்டுள்ளது. கிணறு ஒன்றுக்கு 33 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில்மொத்தமாக 20 சோதனை கிணறுகளை 675 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவுசெய்துள்ளது. சோதனை கிணற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கையின் தேவகோட்டை வட்டத்தில் அமைக்க ஓ.என்.ஜி.சி. அனுமதி கோரியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ராமநாதபுரத்தில் திட்டத்தைத் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் செயலுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அரியலூர் கடலூர் மாவட்டங்களில் இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை முன்மாதிரியாகக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்திலும் சூழலியலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.''
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications