இலங்கை: ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1,000 பட்டினி சாவுக்கு அஞ்சி 15 இலங்கை தமிழர்கள் ராமேஸ்வரம் வருகை
ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
Recommended Video
இதனால் இலங்கையில் இருந்து கடல் வழியாக தப்பி வந்த 60 இலங்கை தமிழர்கள், ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பங்களை சேர்ந்த மேலும் 15 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

தமிழகம் நோக்கி வரும் இலங்கை தமிழர்கள்
ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகள் இலங்கைக்கு அருகே இருப்பதால் இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது இலங்கை தமிழர்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றி கொள்ள அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு வந்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏராளமான இலங்கை தமிழர்கள் இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் தீவிர கண்காணிப்பையும் மீறி ஃபைபர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

15 இலங்கை தமிழர்கள் வருகை
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு பைப்பர் படகில் ஆணைக்கோட்டம் மற்றும் காக்கா தீவை சேர்ந்த யோகன், மாலா, கதிரமலை, ஜெயராம், பேபி ஷாலினி என்ற 9 மாத கை குழந்தை உட்பட 5 குடும்பங்களை சேர்ந்த 15 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையில் வந்து இறங்கினர்.

பச்சை மிளகாய் விலை ரூ.1,000
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இலங்கை தமிழர் ஒருவர் தெரிவிக்கையில், "அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாயை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி வாங்கி சாப்பிட முடியும்?

பட்டினி சாவு அபாயம்
இலங்கையில் மருத்துவ பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல் தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்டினி சாவு ஏற்பட்டு அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்திருக்கிறோம்." என்றார்.

முகாமில் தங்க வைப்பு
அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்ததற்கு பின்னர் 15 இலங்கைத் தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபட்டனர். மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications