அதிமுக கூட்டணி.. இலை, தாமரை, மாம்பழத்தால் செஞ்சது.. அட…. சொல்றது யாருன்னு பாருங்க
ராமநாதபுரம்: அதிமுக கூட்டணி இலை, தாமரை, மாம்பழம் என இயற்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி என்று என்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனை அருகே ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:அதிமுக கூட்டணி ஒரு இயற்கையான கூட்டணி. இலை, தாமரை, மாம்பழம் என இயற்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி.
அதைப் பார்த்து பயந்து போய் ஸ்டாலின் ஓடுகிறார்... ஓடுகிறார்... விஜயகாந்த் வீட்டிற்கே ஓடுகிறார். எதற்காக அங்கு சென்றீர்கள் ஸ்டாலின் அவர்களே? அதிமுக, ஸ்டாலினை முட்டுச் சந்தில் நிறுத்தி உள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பாகிஸ்தானில் இந்தியப்படை அளித்த பதிலடி தாக்குதல் நடத்தியது. இதுதான் அரசியல்.. அதனால்தான் மோடி தனித்திறமை வாய்ந்த தலைவர் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications